அனல்மின் நிலையத்துக்கு எதிரான போராட்டம்... போலீஸார்-விவசாயிகளிடையே கடும் மோதல்; 30 பேர் கைது

பீகாரில் விவசாயிகள் - போலீஸாரிடையே மோதல்
பீகாரில் விவசாயிகள் - போலீஸாரிடையே மோதல்

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் இன்று, காவல் துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் 30 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலம், பக்ஸார் மாவட்டத்தின் சவுசா கிராமத்தில் அனல் மின் நிலையம் கட்டுமானத்துக்காக ஏராளமான விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நிலம் வழங்கிய பல விவசாயிகள், தங்கள் நிலத்துக்கு உரிய இழப்பீடு மற்றும் இளைஞர்களுக்கு வேலை கோரி அனல் மின் நிலையத்தின் கட்டுமான தளத்துக்கு வெளியே கடந்த 10 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், போலீசார் நேற்று அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கலைக்க முயன்றனர்.

அப்போது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பெண்கள் உள்பட பல விவசாயிகள் போலீஸாரின் தாக்குதலுக்கு ஆளாகினர். இந்த சம்பவம் குறித்த ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் இன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்ஸார் மாவட்டத்தில் விவசாயிகள் - போலீஸாரிடையே மோதல்
பக்ஸார் மாவட்டத்தில் விவசாயிகள் - போலீஸாரிடையே மோதல்

இதேபோல், போலீஸார் தரப்பில் மூத்த அதிகாரிகள் உள்பட 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் இதுவரை 30 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விவசாயிகள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அசித் நாத் திவாரி, பாஜக விவசாயிகளின் எதிரி எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "விவசாயிகள் இப்போது பாஜக தலைமையில் இருக்கும் அரசாங்கத்தின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும். சீனாவுக்கு பெரிய நிலப்பரப்புகளை விட்டுக் கொடுப்பவர்கள், விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக கொடூரமாக நடந்துகொள்கிறார்கள்" என விமர்சித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

இதேபோல் மற்றொரு எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) செய்தித் தொடர்பாளர் மிருத்யுஞ்சய் திவாரி கூறுகையில், "போலீஸ் நடவடிக்கை காட்டுமிராண்டித்தனமானது. பெண்கள் கூட காப்பாற்றப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...
#BREAKING : ராம்தேவ்க்கு சம்மன்... நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்!

ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்பனை: திமுக உடந்தை?! அதிருப்தியில் ரசிகர்கள்!

பாமகவுக்கு குடும்பமும், பணமுமே பிரதானம்... பொளந்து கட்டிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!

பாஜக பிரமுகர் கழுத்தை நெரித்துக் கொலை: தகாத உறவைக் கண்டித்ததால் மனைவி வெறிச்செயல்!

பாஜக கொடியுடன் வந்த சொகுசு கார்... தேர்தல் அதிகாரிகளின் சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in