கர்நாடகாவில் வேகம் எடுக்கும் மாணவி கொலை வழக்கு...நேஹா பெற்றோரிடம் சிஐடி அதிகாரிகள் விசாரணை!

நேஹா வீட்டில் சிஐடி அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்
நேஹா வீட்டில் சிஐடி அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்

ஹூப்ளி கல்லூரி மாணவி நேஹா கொலை வழக்குத் தொடர்பாக அவரது பெற்றோரிடம் சிஐடி போலீஸார் ஒருமணி நேரமாக விசாரணை நடத்தினர். அத்துடன் அவர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

கர்நாடகா மாநிலம், ஹூப்ளி மாநகராட்சி உறுப்பினர் நிரஞ்சனா ஹிரேமாதாவின் மகள் நேஹா. இவர் கல்லூரியில் எம்சிஏ படித்து வந்தார். அவரை பாகல் ஃபயாஸ் என்ற மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இந்த காதலை நேஹா ஏற்கவில்லை.

கொலை செய்யப்பட்ட  ஹூப்ளி கல்லூரி  மாணவி நேஹா
கொலை செய்யப்பட்ட ஹூப்ளி கல்லூரி மாணவி நேஹா

இதனால் கல்லூரி வளாகத்தில் வைத்து ஏப்.18-ம் தேதி நேஹாவை ஃபயாஸ் கத்திக் குத்திக்கொலை செய்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக ஃபயாஸை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், இக்கொலை விவகாரத்தை எதிர்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இக்கொலை தொடர்பாக சிஐடி போலீஸார் விசாரணை நடத்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நேஹா அவரது தந்தையுடன்.
கொலை செய்யப்பட்ட நேஹா அவரது தந்தையுடன்.

இந்த நிலையில், ஹூப்ளி பிட்னாலாவில் உள்ள நேஹாவின் வீட்டுக்கு சிஐடி அதிகாரிகள் இன்று சென்றனர். சிஐடி ஏடிஜிபி பி.கே.சிங், எஸ்.பி- வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் நேஹாவின் பெற்றோரிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் நேஹாவின் தந்தை நிரஞ்சன் ஹிரேமத் மற்றும் தாய் கீதாவிடம் வாக்குமூலம் பெற்றனர்.

மேலும், நேஹா இக்கொலை வழக்கு தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட பாகல் ஃபயாஸை சிஐடி அதிகாரிகள், ஹூப்ளியின் பிவிபி கல்லூரிக்கு நேற்று அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ஆறு நாட்கள் காவலில் வைக்கப்பட்ட பின்னர், குற்றவாளி தார்வாட் சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு, கொலை நடந்த இடத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஃபயாஸ்
கைது செய்யப்பட்ட ஃபயாஸ்

இதன் பின் ஃபயாஸிடம் தார்வாட்டில் உள்ள ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டது. நேஹாவை கொலை செய்ய தார்வாட்டில் கத்தியை ஃபயாஸ் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த பின்னணியில், கத்தி வாங்கிய இடம் மற்றும் நண்பர்களைச் சந்தித்த இடங்களை சிஐடி குழுவினர் பார்வையிட உள்ளதாக தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in