சத்தீஸ்கரில் விபரீதம்... போலீஸ்காரர் தவறுதலாக சுட்டதில் மற்றொரு போலீஸ்காரர் பலி!

துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு

சத்தீஸ்கரின் தாண்டேவாடா மாவட்டத்தில் போலீஸ்காரர் தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மாவட்ட ரிசர்வ் போலீஸ் (டிஆர்ஜி) ஒருவர் பலியானார். மற்றொரு போலீஸ்காரர் காயமடைந்தார்.

சத்தீஸ்கர் மாநிலம், தாண்டேவாடா மாவட்டத்தில் மாநில காவல் துறை பிரிவுகளான 'டிஆர்ஜி' மற்றும் 'பஸ்தர் ஃபைட்டர்' படையினர் மாவோயிஸ்ட் எதிரப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தண்டேவாடா - நாராயண்பூர் மாவட்ட எல்லையில் உள்ள ஹந்தவாடா, ஹிட்டாவாடா கிராமங்களில் ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் (கோப்பு படம்)
மாவோயிஸ்டுகள் நடமாட்டம் (கோப்பு படம்)

நேற்று இரவு 11 மணியளவில் இந்த கூட்டு காவல் படையினர் பார்சூர் காவல் நிலைய எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது போலீஸ்காரர் ஒருவர் தவறுதலாக சுட்டதில் டிஆர்ஜி பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபிள்கள் ஜோக்ராஜ் கர்மா, பர்சுராம் அலாமி ஆகிய இருவரும் காயமடைந்தனர்.

இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அதிக ரத்தம் வெளியேறியதால் ஜோக்ராஜ் கர்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பர்சுராம் அலாமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர் உயிரிழப்பு (கோப்பு படம்)
துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர் உயிரிழப்பு (கோப்பு படம்)

முதலுதவிக்குப் பின்னர் அவர் தற்போது ராய்ப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், எந்த போலீஸ்காரரின் துப்பாக்கி, தவறுதலாக சுடப்பட்டது என்பது குறித்த தகவலை சத்தீஸ்கர் போலீஸார் வெளியிடவில்லை.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in