ஐ.பெரியசாமி வழக்கில் மேல்முறையீடு செய்யாதது ஏன்? - லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடர்ந்து வழக்கில், மேல்முறையீடு செய்யாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சராக திமுக ஆட்சியில் பதவி வகித்தவர் ஐ.பெரியசாமி. அப்போது கணேசன் என்பவருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2012 ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐ.பெரியசாமியை விடுதலை செய்து சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு வீட்டு வசதித்துறை குடியிருப்புகள்
தமிழ்நாடு வீட்டு வசதித்துறை குடியிருப்புகள்

இதை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று தொடங்கியது. அப்போது வழக்கில் சாட்சி விசாரணை துவங்கிய பின்பு, விடுவிக்கக் கோரியது ஏன் எனவும், வழக்குப் பதியும்போது குற்றம் சாட்டப்பட்டவர் என்ன பொறுப்பில் இருந்தார் என்பன உள்ளிட்ட 5 கேள்விகளை நீதிபதி எழுப்பி இருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், “முதல் தகவல் அறிக்கையில் ஐ.பெரியசாமியின் பெயர் இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோதுதான் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநரிடம் ஒப்புதல் பெறாமல், சபாநாயகரிடம் ஒப்புதல் பெறப்பட்டது சட்டப்படி தவறு. இதனால்தான் சாட்சி விசாரணை தொடங்கிய பின்னர் விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

முறையான அனுமதி இல்லாமல் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது. அப்படி விசாரிப்பது நீதிமன்ற நேரத்தையும், பொதுமக்கள் பணத்தையும், வீணடிப்பதாகும்” என்று வாதிட்டார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வாதங்களுக்காக விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்றைக்கு ஒத்தி வைத்தார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், “இந்த வழக்கில் ஏன் முறையீடு செய்யவில்லை” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் அவர் ஒத்தி வைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in