அமித் ஷாவை வைத்து போலி வீடியோ: டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு!

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பேசியது போன்று திரிக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பரவிய விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாஜக மூத்த தலைவரும், மத்திய உள் துறை அமைச்சருமான அமித் ஷா, சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பேசினார். இந்நிலையில் அவர் பேசிய வீடியோவை திரித்து, பட்டியல் சாதியினர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசுவது போன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.

இந்நிலையில் சர்ச்சையான, தவறான தகவல்களை குறிப்பிட்டு பரப்பப்பட்ட இந்த வீடியோவை, உருவாக்கி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக சார்பில் டெல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் நேற்று இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகம் சார்பிலும் நடவடிக்கை கோரி, புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாள்வியா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துகளை தவறாக சித்தரிக்கும் வகையில் போலி வீடியோவை தெலங்கானா காங்கிரஸ் பரப்பியுள்ளது. இது பெரிய அளவிலான வன்முறையை ஏற்படுத்தும் திறன் கொண்டது.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

மதத்தின் அடிப்படையில், எஸ்சி / எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரின் பங்கைக் குறைத்ததால் முஸ்லிம்களுக்கு அரசியலமைப்புக்கு முரணாக வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீக்குவது குறித்து அமித் ஷா பேசினார். அஸ்மா உள்ளிட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் ஏராளமானோர் இந்த போலி வீடியோவை பரப்பியுள்ளனர். அவர்கள் சட்ட ரீதியான விளைவுகளுக்கு தயாராக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான புகாரின் பேரில் டெல்லி போலீஸார், அமித் ஷாவின் அசல் வீடியோவையும், சித்தரிக்கப்பட்ட வீடியோவையும் ஒப்பிட்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!

தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!

தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!

அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!

பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in