கார்- பைக் மோதல்... சடலம் கார் மீது விழுந்தது கூட தெரியாமல் 18 கி.மீ. தூரம் ஓட்டிச் சென்ற ஓட்டுநர்!

 கார் - பைக் மோதல்
கார் - பைக் மோதல்

ஆந்திர மாநிலத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதியதில் பைக்கில் வந்த நபர் உயிரிழந்தார். இறந்த நபரின் சடலம் காரின் மேற்கூரையில் விழுந்து கிடந்ததுகூட தெரியாமல் காரை 18 கி.மீ. தூரம் ஓட்டிச் சென்றிருக்கிறார் கார் டிரைவர்.

ஆந்திர மாநிலம், கல்யாணதுர்கம் - அனந்த்பூர் தேசிய நெடுஞ்சாலையில் (என்எச்-544 டி) ஆத்மகூர் அருகே உள்ள ஒய்.கொத்பள்ளி கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஒரு விபத்து நிகழ்ந்தது. அதிவேகத்தில் வந்த எஸ்யுவி கார் ஒன்று பைக்கில் சென்ற ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் பைக்கை ஓட்டி வந்த நபர் தூக்கி வீசப்பட்டதில் அவர் மோதிய காரின் மேற்பகுதியில் விழுந்தார். விழுந்த வேகத்தில் அந்த நபர் உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்தி சடலத்துடன் 18 கி.மீ. சென்ற கார் (கோப்பு படம்)
விபத்தை ஏற்படுத்தி சடலத்துடன் 18 கி.மீ. சென்ற கார் (கோப்பு படம்)

இந்நிலையில், காரின் மேற்பகுதியில் பைக்கில் வந்தவரின் சடலம் இருப்பதை அறியாமல், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், இந்த சம்பவத்தை யாரும் கவனிக்கவில்லை என கருதி, பீதியில் அங்கிருந்து காருடன் வேகமாக தப்பிச் சென்றார்.

சுமார் 18 கி.மீ. கடந்து, பெலுகுப்பா அருகே உள்ள ஹனிமிரெட்டி பல்லே கிராமத்தை வந்ததும், அந்த வழியே வந்தவர்கள் காரின் மேற்பகுதியில் ரத்தம் வழிந்த நிலையில் ஒரு நபர் இறந்து கிடப்பதை கண்டு கூச்சலிட்டு காரை மறித்தனர். இதையடுத்து காரிலிருந்து இறங்கிய ஓட்டுநர், காரின் மேற்பகுதியில் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர், இந்த சம்பவம் குறித்து ஆத்மகூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

இதில், உயிரிழந்த நபர் குடேரு அருகே உள்ள சோழசுந்தரம் கிராமத்தைச் சேர்ந்த டிராக்டர் மெக்கானிக் மஜின்னே எரிசாமி என்பது தெரியவந்தது. மேலும், அவர் மீது மோதிய காரின் பதிவு எண்ணை வைத்து போலீஸார் விசாரணை நடத்தியதில் அந்த கார் பெங்களூருவைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. இதையடுத்து காரின் ஓட்டுநரை பிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in