கொலை, பாலியல் பலாத்காரம்... ஏப்.19 முதல்கட்டத் தேர்தல் வேட்பாளர்களில் இத்தனை பேர் மீது கிரிமினல் வழக்குகளா?

வாக்குப்பதிவு - மாதிரி
வாக்குப்பதிவு - மாதிரி

ஏப்ரல் 19 அன்று முதல் கட்டமாக நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடும் 1618 வேட்பாளர்களில் 252 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முதல் கட்டமாக போட்டியிடும் 1618 வேட்பாளர்களில் 252 பேர், அதாவது 16 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் 15 பேர் தங்களுக்கு எதிரான வழக்குகளில் தண்டனையும் பெற்றுள்ளனர். ’ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்’(ஏடிஆர்) மற்றும் ’தேசிய தேர்தல் கண்காணிப்பு’ ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

21 மாநிலங்களில் நடைபெறும் இந்த முதற்கட்டத் தேர்தலில் போட்டியிடும் 1625 வேட்பாளர்களில் 1618 பேரின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து, ஏடிஆர் அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி 161 வேட்பாளர்கள் அதாவது 10 சதவீதத்தினர் மீது கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 7 வேட்பாளர்கள் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

19 பேர் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் 18 வேட்பாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-ன் கீழ் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கிறார். மேலும், 35 வேட்பாளர்கள் வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகளுக்கு ஆளாகி உள்ளனர்.

நீதிமன்ற வழக்கு
நீதிமன்ற வழக்கு

முதல் கட்ட வேட்பாளர்களில் சுமார் 28 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். சராசரியாக ஒரு வேட்பாளரின் சொத்து மதிப்பு என்பது ரூ.4.51 கோடியாக உள்ளது. கோடீஸ்வர வேட்பாளர்கள் மத்தியில் கட்சி வேறுபாடுகள் எல்லாம் இல்லை. காங்கிரஸின் நகுல்நாத் (ரூ.716 கோடி), அதிமுகவின் அசோக்குமார் (ரூ. 662 கோடி), பாஜகவின் தேவநாதன் யாதவ் (ரூ.304 கோடி) ஆகியோர் சொத்து மதிப்பில் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 அன்று தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதர கட்டங்கள் ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெற உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   


லாலுவின் 2 மகள்களுக்கு வாய்ப்பு... பீகாரில் 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆர்ஜேடி!

சத்தீஸ்கரில் 50 அடி பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்து 12 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி இரங்கல்!

ஈபிஎஸ் நண்பர் வீட்டில் 7 மணி நேரம் ஐ.டி ரெய்டு...2 பெட்டிகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்!

திருமாவளவன் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் திடீர் சோதனை...சிதம்பரத்தில் சிறுத்தைகள் குவிந்ததால் பரபரப்பு!

நள்ளிரவில் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு... கோவையில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in