எல்லையில் பரபரப்பு... பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; பாதுகாப்பு படை வீரர் காயம்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

ஜம்மு காஷ்மீரின் ஆர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீரின் ஆர்னியா பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு தொடங்கி பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையணியினர், எல்லைக்கோடு அருகே இந்திய பகுதிகளின் மீது இரவு முழுவதும் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறுவதாக பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

எல்லை பாதுகாப்பு படை வீரர் காயம்
எல்லை பாதுகாப்பு படை வீரர் காயம்

பாகிஸ்தான் ராணுவத்தினர் வீசிய 3 குண்டுகள், வீடுகளின் அருகில் விழுந்துள்ளன. இதில் ஒரு வீட்டின் சமையலறை சேதமடைந்ததை தவிர, பெரிய அளவில் வேறு எங்கும் சேதங்கள் ஏற்படவில்லை. மேலும் இந்த அத்துமீறிய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக, ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், எல்லைக்கோடு அருகே வசித்து வரும் பொதுமக்களிடையே பரபரப்பு நிலவுகிறது.

எல்லை பாதுகாப்பு படை வீரர் காயம் (ஏ.என்.ஐ. படம்)
எல்லை பாதுகாப்பு படை வீரர் காயம் (ஏ.என்.ஐ. படம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in