அதிர்ச்சி... ஒரு கிலோ எடையிலான தங்கக்கட்டிகளுடன் இளைஞர் கைது!

1 கிலோ எடையிலான தங்கக் கட்டிகளுடன் இளைஞரை கைது செய்த எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள்
1 கிலோ எடையிலான தங்கக் கட்டிகளுடன் இளைஞரை கைது செய்த எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள்

வங்கதேச எல்லையில் ஒரு கிலோ எடையிலான தங்கக் கட்டிகளுடன் இளைஞர் ஒருவரை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் மட்டுமின்றி வங்கதேசத்தில் இருந்தும் தங்கம் மற்றும் போதைப் பொருட்களை கடத்தி வரும் கும்பல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. தற்போது இந்தியாவில் தேர்தல் நடைபெற்று வருவதால், எல்லையோரங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான பாதுகாப்புப் படையினர் தேர்தல் பணிக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பணியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கக்கட்டிகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஜின்னத் அலி மொண்டல்
தங்கக்கட்டிகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஜின்னத் அலி மொண்டல்BG

இதன் ஒரு பகுதியாக இந்தியா-வங்கதேசம் இடையிலான மேற்குவங்க மாநில எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். தக்‌ஷின் தினாஜ்பூர் மாவட்டத்தின் ஹரிபொக்கார் கிராமத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இளைஞர் ஒருவர் சென்ற நிலையில், எல்லைப் பாதுகாப்புப் படையினரை கண்டவுடன் அவர் அங்கிருந்து நழுவிச் செல்ல முயன்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர்.

ட்ரோன் மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருள்
ட்ரோன் மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருள்

அப்போது அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜன்னத் அலி மொண்டல் என்பது தெரியவந்தது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1039.440 கிராம் எடையிலான 9 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கதேசத்திலிருந்து இந்த தங்கக் கட்டிகளை அவர் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினர், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று பஞ்சாப் எல்லையில் ட்ரோன் மூலம் கடத்தப்பட்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று வங்கதேச எல்லையில் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

கடமை தவறிய இன்ஸ்பெக்டர், பெண் காவலர் சஸ்பெண்ட்... இளம்பெண் கொலை வழக்கில் பரபரப்பு!

கோவை பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட ஐ.டி பெண் ஊழியர்... ஓட்டுநர், நடத்துநர் அதிர்ச்சி!

26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அவசர உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in