மூன்றாவது மாடியில் ஏறி 9 சிறுவர்கள் தற்கொலை மிரட்டல்... கூர்நோக்கு இல்லத்தில் பரபரப்பு!

செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்லம்
செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்லம்

செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்லத்தில் சுதந்திரமாக விளையாட அனுமதிக்க கோரி மூன்றாவது மாடியில் ஏறி சிறுவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

செங்கல்பட்டில் தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்பு துறை சார்பில் அரசினர் சிறப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 30-க்கும் அதிகமான சிறார்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு, சமூக விழுமியங்கள் குறித்து பாடங்கள் எடுக்கப்படுவதோடு, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் அதன் சமூக பிரச்சினைகள் குறித்தும் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. மேலும் சிறுவர்கள் தங்களது நேரத்தை செலவிடும் வகையில் புத்தகங்கள் பயில்வது, விளையாட்டில் ஈடுபடுவது போன்றவற்றிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

3வது மாடியில் ஏறி 9 சிறுவர்கள் போராட்டம்
3வது மாடியில் ஏறி 9 சிறுவர்கள் போராட்டம்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்லத்தில் உள்ள சிறுவர்களை அங்குள்ள பாதுகாவலர்கள் சுதந்திரமாக விளையாட அனுமதிப்பதில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. விளையாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அவர்கள் விதிப்பதாகவும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் சிறப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 9 சிறுவர்கள் செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் 3வது மாடிக்கு ஏறி திடீரென இந்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர்கள் மிரட்டல் விடுத்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் போலீஸார், அதிகாரிகள் விசாரணை
சம்பவ இடத்தில் போலீஸார், அதிகாரிகள் விசாரணை

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸாரும். சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகளும் விரைந்துள்ளனர். அப்போது அதிகாரிகள் சிறுவர்களுடன் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர். அதற்கு பதிலளித்த சிறுவர்கள், அரசு சிறப்பு இல்லத்திற்குள் உள்ள மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் கூர்நோக்கு இல்ல வளாகத்தில் சுதந்திரமாக விளையாட அனுமதிக்க கோரியும் போராட்டம் நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்களை மீட்பதற்காக செங்கல்பட்டு தீயணைப்பு துறை வீரர்கள் வருகை தந்துள்ளனர்.

மாணவர்களை மீட்க தீயணைப்புத்துறை வாகனம் வருகை
மாணவர்களை மீட்க தீயணைப்புத்துறை வாகனம் வருகை

தீயணைப்பு வாகனத்தில் உள்ள ஏணியைப் பயன்படுத்தி 3வது மாடிக்குச் சென்று சிறுவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறப்பு இல்ல வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


தத்துவமேதை சாணக்யரின் வம்சமா தோனி ?! வைரலாகும் ஆய்வு முடிவுகள்!

#Oscars2024 | 7 விருதுகளை வென்று மாஸ் காட்டிய ‘ஓப்பன்ஹெய்மர்’!

டிகிரி படித்திருந்தால் போதும்... இந்திய அரசு நிறுவனத்தில் வேலை!

'அனைவரும் பைத்தியமாகி விட்டனர்'... அமைச்சர் உதயநிதி மனைவியின் ஆவேசப் பதிவு!

திண்டுக்கல்லில் ஜோதிமணி, மயிலாடுதுறையில் திருநாவுக்கரசர்?... தொகுதி மாறும் எம்.பி-க்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in