சென்னையில் உள்ள பிரபல மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்... அச்சத்தில் மக்கள்; அதிர்ச்சியில் போலீஸ்!

வி.ஆர் மால்
வி.ஆர் மால்

சென்னையில் உள்ள பிரபலமான வி.ஆர் மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை திருமங்கலம் பகுதியில் பிரபலமான வி.ஆர் மால் அமைந்துள்ளது. இங்கு சுமார் 250 கடைகள், 10 திரையரங்கு செயல்பட்டு வருகிறது. மேலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று மதியம் வி.ஆர் மாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும், காவல் துறையினர் விரைந்து சென்று அதனை செயலிழக்க வைக்குமாறு இமெயில் மூலம் வி.ஆர்.மால் நிர்வாகத்திற்கு மிரட்டல் வந்தது.

வி.ஆர் மால்
வி.ஆர் மால்

உடனே மால் நிர்வாகம் சார்பாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் திருமங்கலம் போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று அங்குள்ள அனைத்து கடைகள் , தியேட்டர்களில் சோதனை நடத்தினர்.

மேலும் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என என்பதற்காக ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்த போலீஸார், பின்னர் மக்களை அங்கிருந்து வெளியேற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு
வெடிகுண்டு

இரண்டு மணிநேர சோதனைக்கு பிறது வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீஸார் இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in