இதேபோல குற்றவாளிகளெல்லாம் போலீஸ் பாதுகாப்பு கேட்பார்கள்... பாஜக நிர்வாகியின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் உடன் அண்ணாமலை
ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் உடன் அண்ணாமலை

49 செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடையவரும், குற்றங்களுக்கான சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றுள்ள பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ்க்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் - அண்ணாமலை
ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் - அண்ணாமலை

பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளராகவும், 49 செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபருமாக இருப்பவர் வி.வெங்கடேஷ். இவர் தன்னுடைய உயிருக்கும் உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “தான் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். கல்வி சார்ந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். தன்னுடைய உறவினர் ஒருவரை முத்துசரவணன் என்பவர் படுகொலை செய்தார். இந்த வழக்கில் கடந்த 2023 ம் ஆண்டு முத்துச்சரவணை காவல்துறை என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த என்கவுண்டருக்கு தான்தான் காரணம் என சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பரவியுள்ளன. இதனால், தனக்கு கொலை மிரட்டல் வருவதால், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது, காவல்துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “வெங்கடேஷ் மீது 10 குற்ற வழக்குகள், ஆந்திராவில் 49 வழக்குகள் உள்ளன. இவருடைய பெயரில் குற்றங்களுக்கான சரித்திர பதிவேடு உள்ளது. இதுமட்டுமின்றி செம்மரக் கடத்தல் வழக்கு, துப்பாக்கி வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பதால் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு முடியாது” என கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

இதனை பதிவு செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "எந்த குற்றப்பின்னணியும் இல்லாமல் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தால், அவருக்கு எந்த வித தயக்கமும் இல்லாமல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருப்பேன். வெங்கடேஷ்க்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இதேபோல் குற்றவாளிகள் பலரும் போலீஸ் பாதுகாப்பு கேட்கும் சூழல் உருவாகும். அது நீதித்துறையின் மீதான நம்பிக்கையும் இழக்க வைக்கும். அவர் மீது செம்மர கடத்தல் வழக்குகளும் நிலுவையில் இருப்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது" எனத் தெரிவித்து அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...    
நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in