தருமபுரம் ஆதினத்தை மிரட்டிய வழக்கு... பாஜக பிரமுகரின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி!

தருமபுரம் ஆதீனம், பாஜக மாவட்ட தலைவர் அகோரம்
தருமபுரம் ஆதீனம், பாஜக மாவட்ட தலைவர் அகோரம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்துக்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான பாஜக நிர்வாகி அகோரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிகவும் பழமையான மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தின் 27 வது தலைமை மடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார். இவரின் உதவியாளர் விருதகிரி என்பவர் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் மனு ஒன்றை கடந்த பிப்ரவரி 21 ம் தேதி அளித்துள்ளார்.

அதில், தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச விடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்ததாக வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோர் மிரட்டியதாகவும், அதற்கு செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு,  மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ க தலைவர் அகோரம் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த 5 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தருமபுரம் ஆதீனகர்த்தர்
தருமபுரம் ஆதீனகர்த்தர்

இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட அகோரம் ஏற்கெனவே ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஜாமின் கோரி இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி தமிழ்செல்வி முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, " அகோரம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார். 45 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று முறையிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

காவல்துறை தரப்பில், "இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சில குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் அகோரத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது" என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல்துறை வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அகோரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in