கிரிக்கெட் ரசிகர்களே உஷார்... ஐபிஎல் டிக்கெட் வாங்க முயன்று ரூ.86,000 பறிகொடுத்த பெண்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி
Updated on
2 min read

பெங்களூருவில் பேஸ்புக் வழியாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு, டிக்கெட் வாங்க முயன்ற பெண்ணிடம் ரூ.86 ஆயிரம் பறித்த, மர்ம கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேஸ்புக்கில் ஐபிஎல் டிக்கெட் வாங்க முயன்ற பெண்ணிடம் மோசடி
பேஸ்புக்கில் ஐபிஎல் டிக்கெட் வாங்க முயன்ற பெண்ணிடம் மோசடி

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 43 வயது பெண் ஒருவர், கடந்த மார்ச் 29ம் தேதி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக ஆன்லைன் வழியாக 20 டிக்கெட் பெற முயன்றார்.

அவர் பேஸ்புக்கில் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட் என்ற பக்கத்தில் பார்த்து, அதில் உள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் பேசிய நபர், அந்த பெண்ணுக்கு டிக்கெட்டை பெற்றுத் தருவதாக கூறி, ஆன்லைன் வழியாக பல்வேறு தவணைகளில் ரூ.86 ஆயிரம் பெற்றுள்ளார்.

தொடர்ந்து பணத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு, டிக்கெட் வழங்காததால் ஒரு கட்டத்தில் அந்தப் பெண் டிக்கெட்டை வழங்குங்கள் அல்லது பணத்தை திரும்பத் தாருங்கள் எனக் கேட்டுள்ளார்.

பண மோசடி
பண மோசடி

ஆனால், அந்த நபர் மேலும் பணம் செலுத்தினால் தான் டிக்கெட் கிடைக்கும் என கூறியுள்ளார். ஆனால், அந்தப் பெண் இதற்கு பிறகு பணம் செலுத்த மறுத்ததோடு, டிக்கெட் அல்லது பணத்தை தராவிட்டால் போலீஸில் புகார் தெரிவிப்பேன் என கூறியுள்ளார். அப்போது அந்த நபர், முடிந்தால் புகார் செய்து கொள்ளுங்கள் என சவால் விட்டுள்ளார். இதையடுத்து பணத்தை பறிகொடுத்த பெண், பெங்களூரு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மோசடி நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

சாதி வாரி கணக்கெடுப்பு... இலவச கல்வி... ஏழை குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

கலக்கும் கருப்பையா... கலங்கும் துரைவைகோ... மலைக்கோட்டையில் மகுடம் யாருக்கு?

பெங்களூருவைத் தொடர்ந்து கேரளாவிலும் குண்டு வெடிப்பு... 2 பேர் படுகாயம்!

48 மணி நேரம் தான் டைம்: சந்திரபாபு நாயுடுவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்!

மத்திய அரசு அதிரடி அறிவிப்பு... இனி குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் இதுவும் கட்டாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in