பரபரப்பு... பெங்களூரு உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் மர்மச் சாவு!

கணவர் குழந்தையுடன் வழக்கறிஞர் சைத்ரா.
கணவர் குழந்தையுடன் வழக்கறிஞர் சைத்ரா.

உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு உயர் நீதிமன்ற வழக்கறிஞரான சைத்ரா மர்மமான முறையில் வீட்டில் இன்று இறந்து கிடந்தார். மின் விசிறியில் தொங்கிய நிலையில் இருந்த சைத்ராவின் உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போட்டியில் பரிசு பெற்ற சைத்ரா.
போட்டியில் பரிசு பெற்ற சைத்ரா.

கர்நாடகாவின் தொழில் வளர்ச்சி கழகத்தில் துணைப்பிரிவு அதிகாரியான சிவக்குமாரை கடந்த 2016-ம் ஆண்டு சைத்ரா திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. சைத்ரா குடும்பத்துடன், சஞ்சய் நகர் காவல் நிலைய பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், அவர் மர்மமான முறையில் இன்று இறந்துள்ளார். கணவரின் கணவர் வெளியே சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் வீட்டிற்கு வந்த போது தான், சைத்ரா உயிரிழந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.

உயர் நீதிமன்ற வழக்கறிஞராக சைத்ரா இருப்பதால், அவரை வழக்குத் தொடர்பாக யாராவது மிரட்டினார்களா அல்லது குடும்பத்தில் மோதல் நடந்ததா என அனைத்து கோணங்களிலும் சஞ்சய் நகர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் வழக்கறிஞர் சந்தேகமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in