சிறுமி படுகொலை; புதுச்சேரியில் நாளை மறுதினம் பந்த் - இந்தியா கூட்டணி, அதிமுக அறிவிப்பு!

படுகொலையான சிறுமியின் வீடு
படுகொலையான சிறுமியின் வீடு
Updated on
2 min read

சிறுமி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் நாளை மறுதினம் (மார்ச்-8) இந்தியா கூட்டணி கட்சிகளும், அதிமுகவும் பந்த் நடத்த உள்ளன.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொதுமக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் புதுச்சேரியின் பல இடங்களில் இன்று போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக நாளை மறுதினம் (மார்ச் 08) பந்த் அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினமே இந்தியா கூட்டணியும் பந்த் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியா கூட்டணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சிறுமியின் உயிரிழப்பிற்கு நீதி வேண்டியும், சிறுமி உயிரிழப்பிற்கு முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் தார்மீக பொறுப்பேற்க வலியுறுத்தியும், புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுபடுத்தக்கோரியும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை (07.03.2024) மாலை 4 மணிக்கு அமைதி பேரணியும், நாளை மறுதினம் (08.03.2024) புதுச்சேரி முழுவதும் பந்த் போராட்டமும் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்ரூ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி கூட்டம்
இந்தியா கூட்டணி கூட்டம்

இது தொடர்பாக புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது, "சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். புதுவையில் திறக்கப்பட்டுள்ள ரெஸ்டோ பார்களில் கஞ்சா, ஹெராயின், எல்சிடி மாத்திரை என அனைத்து போதை வஸ்துகளும் தங்குதடையின்றி தாராளமாக கிடைக்கிறது. ரெஸ்டோ பார்களில் விடிய, விடிய இளைஞர்கள் கூட்டம் நடனம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு நடத்துகின்றனர்.போதை கும்பலால்தான் சீரழிவு தொடர்கிறது.

வார இறுதி நாட்களில் புதுவையில் அலங்கோலமான உடைகளில் சுற்றுலா என்ற பெயரில் நகர பகுதி முழுவதும் பெண்கள் வலம் வருகின்றனர். இதற்கு அரசு வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். வருமானம் வருகிறது என்பதற்காக மக்கள் பாதிக்கப்படும் விஷயங்களை அரசு ஆதரிக்கக் கூடாது.

அதிமுக கூட்டம்
அதிமுக கூட்டம்

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர், தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரை அழைத்து உத்தரவிட வேண்டும். முத்தியால்பேட்டை காவல்நிலைய போலீஸார் மெத்தனமாக செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அங்குள்ள போலீஸாரை கூண்டோடு மாற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசை கண்டித்து வெள்ளிக்கிழமை (மார்ச் 8) அதிமுக சார்பில் முழு பந்த் போராட்டம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் மாநிலம் முழுக்க நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஷாக்... பிறந்த நாள் கொண்டாட காதலி வீட்டிற்கு சென்ற காதலன் அடித்துக் கொலை!

மருத்துவர்களின் 12 மணி நேர போராட்டத்தால் பெயிண்டருக்கு மீண்டும் கிடைத்த வாழ்க்'கை'

நான்கு மாநில விருதுகள்... பிரபல கதாசிரியர் மாரடைப்பால் திடீர் மரணம்!

நன்றி மறந்தாரா யுவன்?! சர்சையைக் கிளப்பும் ‘தென்மாவட்டம்’!

அடுத்தடுத்து வெளியாகும் ஆபாச புகைப்படங்கள்... 'வில்லேஜ் புட் பேக்டரி' க்கு வந்த சோதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in