ஓட ஓட விரட்டி ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை... சென்னையில் பயங்கரம்!

ஓட ஓட விரட்டி ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை... சென்னையில் பயங்கரம்!
Updated on
2 min read

குன்றத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், கம்பர் தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் நிஷாந்த் (23) லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று இரவு நிஷாந்த் வீட்டின் அருகே அமர்ந்து செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார். அப்போது இரண்டு பைக்கில் வந்த 5 பேர் கொண்ட மர்மக் கும்பல் நிஷாந்த்தை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதனால் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நிஷாந்த் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், அந்த கும்பல் விடாமல் விரட்டிச் சென்று நிஷாந்தை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் நிஷாந்த் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் குன்றத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிஷாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிஷாந்த்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவரை நிஷாந்த் வெட்டியது தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அஜித் தரப்பினர் நிஷாந்தை வெட்டிக் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆயினும் நிஷாந்த் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரண்டு தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் தமிழகத்தில் 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!

திமுக - மநீம தொகுதி உடன்பாடு இன்று கையெழுத்தாக வாய்ப்பு!

குட்நியூஸ்... தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: நாளை தொடங்குகிறது!

அதிமுக முன்னாள் பெண் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு...16 கோடி ரூபாய் ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு!

கூச்சமே இல்லாமல் எப்படி வருகிறீர்கள்?: பிரதமர் மோடி மீது சாட்டை சொடுக்கிய திமுக!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in