அடுத்தடுத்த அறைகளில் தாதாக்கள்; திகார் சிறையில் கேஜ்ரிவாலுக்கு அச்சுறுத்தல்? - பதற்றத்தில் ஆம் ஆத்மி!

சிறைக்கு கொண்டுசெல்லப்படும் அர்விந்த் கேஜ்ரிவால்
சிறைக்கு கொண்டுசெல்லப்படும் அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில், அவருக்கு அருகே தாதாக்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

அமலாக்கத்துறையால் கைதான அர்விந்த் கேஜ்ரிவால்
அமலாக்கத்துறையால் கைதான அர்விந்த் கேஜ்ரிவால்

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி ரூ.100 கோடி ஆதாயம் அடைந்ததாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச். 21-ம் தேதி கைது செய்தது. இந்நிலையில், சிறையில் இருந்தபடியே டெல்லி மாநில அரசின் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார். நிதிமுறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சுர்ஜித் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவாலை காவில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்தது. பின்னர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, டெல்லி திகார் சிறையில் அடைத்தது. ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் அடைக்கப்பட்டிருந்த 2ம் எண் சிறையில் கேஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கேஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே அடுத்தடுத்து தாதாக்கள் அடைக்கப்பட்டுள்ளனர். தாவூத் இப்ராஹிமின் முன்னாள் கூட்டாளியான சோட்டா ராஜன், கேஜ்ரிவால் அறைக்கு அருகே உள்ள அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால்

40 வழக்குகளில் தொடர்புடைய நீரஜ் பவானா, கேஜ்ரிவால் அறைக்கு அருகே உள்ள இன்னொரு அறையில் அடைக்கப்ப்டடுள்ளார். பயங்கரவாதி ஜியாவுர் ரகுமானும், கேஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே உள்ள மற்றொரு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அர்விந்த் கேஜ்ரிவால் இருக்கும் அறைக்கு அருகே தாதாக்கள் அடைத்து வைத்து, மறைமுகமாக அவருக்கு மன அழுத்ததையும், பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் திட்டமிட்டு மத்திய அரசு உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in