சாமி சிலைக்கு அணிவிக்கப்பட்ட 17 சவரன் நகைகள் கொள்ளை; தண்ணீர் குழாய்க்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்!

கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த திரெளபதி அம்மன் கோயில்
கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த திரெளபதி அம்மன் கோயில்

அரியலூர் அருகே கோயிலுக்குள் நுழைந்து சாமி கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 17 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் வெள்ளிப் பொருள்களை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உத்த மேலக்குடியிருப்பு பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், தினம்தோறும் சாமி தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். மேலும் பலர் தங்களது நேர்த்திக்கடனுக்காக அம்மனுக்கு தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளனர். நேற்று இரவு, வழக்கம் போல் கோயிலைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் பூசாரி.

குடிநீருக்காக போடப்பட்ட பைப் வழியாக வந்து கொள்ளை எனத் தகவல்
குடிநீருக்காக போடப்பட்ட பைப் வழியாக வந்து கொள்ளை எனத் தகவல்

இன்று காலை மீண்டும் கோயிலை திறப்பதற்காக வந்த போது கோயிலின் கதவு திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது சாமியின் கழுத்தில் இருந்த 17 சவரன் தங்கக் காசுகள் அடங்கிய தங்கச் செயின், கோயிலில் இருந்த வெள்ளிப் பொருட்கள் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக பூசாரியும், ஊர் பொதுமக்களும் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பொதுமக்களிடம் விசாரணை நடத்தும் போலீஸார்
பொதுமக்களிடம் விசாரணை நடத்தும் போலீஸார்

அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கோயிலை சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டிருந்த போதும், தண்ணீர் பைப் போடுவதற்காக குழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயின் வழியாக உள்ளே நுழைந்து கோயிலில் கொள்ளை சம்பவத்தில் மர்ம நபர் ஈடுபட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர், தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அருகாமையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பெலிக்ஸ் ஜெரால்டு எங்கே?! கண்டுபிடித்துத் தருமாறு மனைவி காவல்துறையில் மனு!

பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து... பல லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!

ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல்... பள்ளிக்கல்வித்துறை புதிய அப்டேட்ஸ்!

16,500 கோடி பயிர்க் கடன்... இந்த ஆண்டுக்கு இலக்கு நிர்ணயித்தது கூட்டுறவுத் துறை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in