
டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளது வாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 17–ம் தேதி காஞ்சிபுரம் – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக் ரைடிங் சென்றபோது, ஆபத்தான முறையில் வீலிங் செய்த யூட்யூபர் டிடிஎஃப் வாசன், கடுமையான விபத்தில் சிக்கினார். கையில் காயத்துடன் மட்டும் தப்பிய வாசன் மீது அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், பாதசாரிகள் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பலமுறை ஜாமீன் கேட்டும், அவரது மனு நிராகரிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. அதைத் தொடர்ந்த மேல்முறையீட்டில், சென்னை உயர்நீதிமன்றத்திலும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த நிலையில், வாசனின் ஓட்டுநர் உரிமம் 06.10.2023 முதல் 05.10.2033 வரை ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதனால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வாசன் வாகனம் ஓட்ட முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!
பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!
அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!