15 நாட்களில் திருமணம்; கட்டிட பணியின் போது இளைஞர் பலி!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த வெங்கடேசன்
மின்சாரம் தாக்கி உயிரிழந்த வெங்கடேசன்
Updated on
1 min read

கும்பகோணம் அருகே கட்டிட வேலைக்கு சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருமணத்திற்கு 15 நாட்களே உள்ள நிலையில், இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம் தோப்பு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(30). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமண வரன் பார்த்து வந்தனர். சமீபத்தில் இவருக்கு ஒரு பெண் நிச்சயித்து, திருமணம் வரும் ஜூன் மாதத்தில் இருவீட்டாரும் உறுதி செய்தனர். பல ஆண்டுகளாக பெண் தேடி வந்த நிலையில், தற்போது நிச்சர்யதார்த்தம் முடிந்ததால், வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்றும் வெங்கடேசனுக்கு குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதை மீறி, கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் ஒத்த தெருவில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் வீட்டின் கட்டுமான பணிக்கு வெங்கடேசன் சென்றுள்ளார். கான்கிரீட் கலவை அள்ளி செல்லும் போது எதிர்பாராத விதமாக கால் தடுக்கி மின்சாரம் செல்லக்கூடிய வீட்டின் சர்வீஸ் ஒயரில் விழுந்துள்ளார். ஒயர் அறுந்து மின்சாரம் தாக்கியதில் வெங்கடேசன் நிலை குலைந்து கீழே சரிந்து உள்ளார். அவரை உடனடியாக மற்ற தொழிலாளிகள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வெங்கடேசனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து திருமணத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சாட்டையால் அடிவாங்கும் விநோத திருவிழா... பயபக்தியுடன் குவிந்த பக்தர்கள்

இன்று தேசிய சகோதரர்கள் தினம்... அண்ணன் - தம்பியாக பிறந்தவர்களும், வாழ்பவர்களும் கொண்டாட வேண்டிய தினம்!

பாஜகவின் டபுள் இஞ்சின் இம்முறை கட்டாயம் தடம் புரளும் -அகிலேஷ் யாதவ் ஆருடம்

அதிர்ச்சி... மினிபேருந்து மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி!

விடிய விடிய நடந்த விருந்தில் கொக்கெய்ன், ஹைட்ரோ கஞ்சா அடித்த நடிகைகள்... பெங்களூருவில் நடந்தது என்ன?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in