எனக்குக் கிடைக்காது எதுவும் யாருக்கும் கிடைக்கக் கூடாது... காதலர்களைச் சுட்டுக் கொன்று வாலிபரும் தற்கொலை!

எனக்குக் கிடைக்காது எதுவும் யாருக்கும் கிடைக்கக் கூடாது... காதலர்களைச் சுட்டுக் கொன்று  வாலிபரும் தற்கொலை!

காதலிக்க மறுத்த இளம்பெண்ணையும், அவரது காதலனையும் சுட்டுக் கொன்ற வாலிபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூர்

மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் செஹோர் மாவட்டத்தில் உள்ள ரெஹ்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் யாதவ்(26). இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த சினேகா ஜாட்(22) என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். அத்துடன் தனது காதலை சினேகாவிடம் அபிஷேக் கூறியுள்ளார். ஆனால், அவரது காதலை சினேகா ஏற்கவில்லை. ஆனாலும், சினேகாவை ஒருதலையாக அபிஷேக் காதலித்து வந்தார்.

இந்த நிலையில், சினேகா, அதே கல்லூரியில் படிக்கும் அவரது உறவினரான தீபக்கை காதலித்துள்ளார். அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இதைப் பார்த்த அபிஷேக் அதிர்ச்சியடைந்தார். பல ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்த தனது காதலி, வேறு ஓருவரை காதலிப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனக்குக் கிடைக்காத காதலி, இன்னொருவருக்கு கிடைக்காது என்று முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை கோயிலுக்கு சினேகாவும், தீபக்கும் சென்றனர். அவர்களை அபிஷேக் யாதவ் பின் தொடர்ந்து வந்துள்ளார். வழியில் அவர்களை மறித்து அபிஷேக் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சினேகா, தீபக் உயிரிழந்தார். இதைப் பார்த்த அபிஷேக் யாதவ், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். தகவல் அறிந்து வந்து போலீஸார் பார்த்த போது அபிஷேக்கும் உயிரிழந்தது தெரிய வந்தது.

இச்சம்பவம் ஒரு காதல் விவகாரத்தில் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக இந்தூர் காவல் துணை ஆணையர் மீனா தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

சாதி வாரி கணக்கெடுப்பு... இலவச கல்வி... ஏழை குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

கலக்கும் கருப்பையா... கலங்கும் துரைவைகோ... மலைக்கோட்டையில் மகுடம் யாருக்கு?

பெங்களூருவைத் தொடர்ந்து கேரளாவிலும் குண்டு வெடிப்பு... 2 பேர் படுகாயம்!

48 மணி நேரம் தான் டைம்: சந்திரபாபு நாயுடுவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்!

மத்திய அரசு அதிரடி அறிவிப்பு... இனி குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் இதுவும் கட்டாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in