இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் தொழிலாளி... பலாத்காரம் செய்து படுகொலை செய்த சிறுவன்!

இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் தொழிலாளி... பலாத்காரம் செய்து படுகொலை செய்த சிறுவன்!

பெங்களூருவில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து அடித்துக் கொலை செய்த 18 வயது சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும், குற்றம் குறைந்தபாடில்லை. பெங்களூரு அமிர்தல்லியில் உள்ள காபி போர்டு அருகே ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள், அமிர்தல்லி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், கொலை செய்யப்பட்டுக் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.

கொலை செய்யப்பட்ட பெண், ராய்ச்சூரைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி என்பது தெரிய வந்தது. அவர் வேலை முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, 18 வயது சிறுவன் அந்த பெண்ணை வழிமறித்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதன் பின் அவரை அடித்துக் கொடூரமாக கொலை செய்து விட்டு உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடி விட்டது தெரிய வந்தது. நேற்று முன்தினம் இரவு நடந்த இச்சம்பவம், தாமதமாக தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இக்கொலையில் ஈடுபட்ட சிறுவன் யார்? கொலை செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளி யார் என்பது குறித்து அமிர்தல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் அவர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...  

 குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in