கலித்தொகையில் இருக்கிறது ஜல்லிக்கட்டு... அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்!

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

கலித்தொகையில் ஜல்லிக்கட்டு பற்றிய குறிப்புகள் இருப்பதாக டி.எஸ்.கிருஷ்ணன் என்பவர்  ட்விட்டரில் பதிவிட்டுள்ளதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தனது ட்விட்டர் பக்கத்தில்  பகிர்ந்துள்ளார்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

தை மாதம் பிறந்ததும் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டு முதலில்  தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரம், பாலமேடு, பெரிய சூரியூர் என்று தொடர்ந்து இன்றைய தினம் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் 'ஜல்லிக்கட்டு என்ற சனாதனத் திருநாள்' என்ற தலைப்பில் டி.எஸ்.கிருஷ்ணன் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "சங்க காலத்திலிருந்து கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு என்ற ஏறு தழுவுதல் விழாவைப் பற்றி கலித்தொகை விரிவான குறிப்புகளைத் தருகிறது. முதலில் தெய்வ வழிபாடு செய்த பிறகே விழா தொடங்குகிறது. ஸ்டேடியத்தில் அல்ல" என்று எழுதியுள்ளார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இந்தப் பதிவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்து தனது கருத்தையும் அதில் கூறியுள்ளார். அதில், "கலித்தொகையில் பல உருவகங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆபரணங்கள், சின்னங்கள், தனித்துவமான அம்சங்கள் என போன்றவை எல்லாம் பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், சிவன், முருகன் ஆகியோருடன் தொடர்புடையவை. அவை அந்தக் கால மக்களின் வாழ்க்கையின் அங்கமாக இருந்தன.

அந்த காலக்கட்ட வாழ்க்கையை வேறுபடுத்திப் பார்ப்பது குறும்புத் தனமானது, தவறான நோக்கமும், பிரிவினைவாதமும் ஆகும் என்று டி.எஸ்.கிருஷ்ணன் காட்டுகிறார்" எனக் கூறியுள்ளார்.

மேலும் டி.எஸ்.கிருஷ்ணன் கடந்த ஆண்டு எழுதிய பதிவு ஒன்றையும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்துள்ளார். அதில், "பொங்கலைப் போலவே ஜல்லிக்கட்டும் ஹிந்து சமயத்தைச் சேர்ந்த வீர விழாவாகும். சங்க இலக்கியமான கலித்தொகை, ஜல்லிக்கட்டுக் காளைகளோடு நமது கடவுள்களை ஒப்பிட்டு ஒரு பாடல் மூலம் அழகாக வர்ணிக்கிறது" என்கிறார் டி.எஸ்.கிருஷ்ணன்.

இதைப் பற்றித் தனது கருத்தைக் கூறியுள்ள அமைச்சர் நிர்மலா சீதாராமன், "சங்க கால இலக்கியப் படைப்பான கலித்தொகையில் பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், மகாதேவர் மற்றும் முருகன் போன்ற கடவுள்களின் தோல் நிறத்துடன் காளைகள் எவ்வாறு ஒப்பிடப்பட்டன என்பதைக் அறிஞர் டி.எஸ்.கிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in