அடுத்தடுத்து சோகம்... நடப்பாண்டில் வெள்ளியங்கிரி மலையில் 8வது நபர் உயிரிழப்பு!

உயிரிழந்த வீரக்குமார்
உயிரிழந்த வீரக்குமார்

கோவை வெள்ளியங்கிரி மலைக்கு சாமி தரிசனத்திற்காக சென்றிருந்த நபர் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவருடன் சேர்த்து நடப்பாண்டில் இதுவரை வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோயிலின் அருகில் உள்ள 7 மலைகள் ஏறினால், வெள்ளியங்கிரி மலைக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சித்திரை மாதம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மலை ஏறி வருகின்றனர்.

வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் (கோப்பு படம்)
வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் (கோப்பு படம்)

கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் மலை ஏறும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் இழக்கின்றனர். மலையின் மீது நிலவும் கடுமையான குளிர் மற்றும் குறைவான ஆக்ஸிஜன் காரணமாக இந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை நடப்பாண்டில் 7 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில்
பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில்

இந்த நிலையில் கடந்த 18ம் தேதி இரவு திருப்பூரைச் சேர்ந்த வீரக்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறினார். 19ம் தேதி சாமி தரிசனம் முடிந்து மலையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த போது 7வது மலையில் தவறி விழுந்து காயம் அடைந்தார். வயிறு மற்றும் காலில் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், வனத்துறையினர் டோலி மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதனால் நடப்பாண்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

கோவை ஆலாந்துறை காவல் நிலையம்
கோவை ஆலாந்துறை காவல் நிலையம்

கடந்த 2022ம் ஆண்டில் 13 பேரும், 2023ம் ஆண்டில் 8 பேரும் வெள்ளியங்கிரி மலை ஏறும் போது உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான உயிரிழப்புகள் பிப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையே மலையேற்றம் திறக்கும் காலத்தில் நிகழ்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே முழு உடல் தகுதி உடையவர்கள் மட்டுமே இது போன்ற மலை ஏற்றத்தில் ஈடுபட வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் மருத்துவ முகாமை திறக்கவும், மலை உச்சியில் தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கவும் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in