திருமண விழாவில் தீ விபத்து... 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி!

பீகார் மாநிலம், தர்பங்கா அருகே திருமண விழாவில் தீ விபத்து
பீகார் மாநிலம், தர்பங்கா அருகே திருமண விழாவில் தீ விபத்து

பீகாரில் திருமண விழாவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பசுக்களும் பலியாகின.

பீகார் மாநிலம், தர்பங்கா அருகே பஹேரா பகுதியில் உள்ள அலி நகரில் திருமண விஷேச வீட்டில் நேற்று இரவு 11.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விஷேசத்தை முன்னிட்டு அங்கு போடப்பட்டிருந்த கொட்டகையில் தீப்பிடித்து. திருமண கொண்டாட்டத்தின்போது, பட்டாசு வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

தீ விபத்தில் சேதமடைந்து கிடக்கும் பந்தல்
தீ விபத்தில் சேதமடைந்து கிடக்கும் பந்தல்

தீ விபத்து குறித்து தர்பங்கா மூத்த போலீஸ் சூப்பிரண்டு (எஸ்எஸ்பி) ஜகுநாத் ரெட்டி கூறுகையில், “தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததுமே ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. சிறிது நேரத்தில் தீ அணைத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் இந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் சுனில் பாஸ்வான் (26), லீலா தேவி (23), காஞ்சனா தேவி (26), சித்தாந்த் குமார் (4), சஷாங்க் குமார் (3), சாக் ஷி குமாரி (5) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 3 பசுக்களும் தீயில் கருகி உயிரிழந்தன. இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.” என்றார்.

தீ விபத்து நிகழ்ந்த இடம்
தீ விபத்து நிகழ்ந்த இடம்

இதற்கிடையே இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இயன்ற அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என மாவட்ட கலெக்டர் ராஜீவ் ரோஷன் தெரிவித்துள்ளார்.

திருமண விழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in