நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரி... அதிவேகமாய் வந்த கார் மோதி 6 பேர் பலியான சோகம்!

நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி

தெலங்கானாவில், நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி ஒன்றின் பின்புறம் கார் ஒன்று அதிவேகத்தில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்திலும் தற்போது வரலாறு காணாத அளவிற்கு கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தர் ராவ் என்பவர் தனது குடும்பத்துடன் ஆந்திராவில் உள்ள குணதலா என்ற பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு காரில் புறப்பட்டிருக்கிறார்.

நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி

அவர்கள் அனைவரும் தேவாலய வழிபாட்டை முடித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊரான கம்மம் மாவட்டத்திற்கு திரும்பி கொண்டு இருந்தனர். வெயில் பயணத்தை தவிர்ப்பதற்காக அவர்கள் இன்று அதிகாலை பயணத்தை துவங்கியுள்ளனர். சூரியபேட்டை அருகே வந்தபோது நெடுஞ்சாலையில் லாரி ஒன்று பழுதாகி நின்றுகொண்டு இருந்தது. அந்த லாரியில் எச்சரிக்கை விளக்குகள் எதுவும் எறியவில்லை என கூறப்படுகிறது.

நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி

இதனால், காரை ஓட்டி வந்த ஓட்டுநர் எதிர்பாராத விதமாக அதிவேகத்தில் லாரியின் பின்புறத்தில் காரை மோதினார். இதில் காரில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மேலும் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், விபத்தில் சிக்கிய கார் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in