அரியலூர் அருகே பயங்கர விபத்து... லாரி மீது கார் மோதியதில் 4 பேர் மரணம்

அரியலூர் விபத்து
அரியலூர் விபத்து

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

அரியலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருமானூருக்கு அருகே உள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது வேகமாக கார் லாரியின் மீது வேகமாக மோதியுள்ளது.

விபத்து
விபத்து

இந்த கோரமான விபத்தினால் கார் முற்றிலும் சிதைந்து சேதமடைந்தது. இதனையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்களை மீட்க முற்பட்ட நிலையில், காரில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தது தெரியவந்தது.

அரியலூர் விபத்து
அரியலூர் விபத்து

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்கட்ட தகவல்களின்படி, உயிரிழந்த 4 பேரும் ஆண்கள் என்பதும், இவர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அரியலூரில் நடந்த ஒரு சுபநிகழ்ச்சியில் ஹோமம் வளர்த்துவிட்டு ஊர் திரும்பியபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in