வாக்குப்பதிவில் சோகம்... கேரளாவில் வெயிலால் மயங்கி விழுந்து 4 பேர் மரணம்

வெயிலின் உக்கிரத்தால் கேரளாவில் 4 பேர் உயிரிழப்பு
வெயிலின் உக்கிரத்தால் கேரளாவில் 4 பேர் உயிரிழப்பு

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், கேரளாவில் வெவ்வேறு இடங்களில் வெயிலால் இன்று 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் வரவிருக்கும் சில நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும், வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் வானிலை ஆய்வு மையம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கேரளாவில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் (கோப்பு படம்)
கேரளாவில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் (கோப்பு படம்)

இதேபோல், வாக்களிக்க வரும் வாக்காளர்கள் வெயில் பாதிப்பை தவிர்க்கும் வகையில் வாக்குச் சாவடிகளில் நிழற்பந்தல், குடிநீர், மின்விசிறி உள்ளிட்ட வசதிகளை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநில தலைமை தேர்தல் ஆணையர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தினமான இன்று கேரள மாநிலத்தில் வாக்களித்து விட்டு வந்த வாக்காளர்கள் மற்றும் ஒரு வாக்குச்சாவடி முகவர் என 4 பேர் வெயிலால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு

பாலக்காடு அருகே ஒட்டபாலத்தில் 68 வயது வாக்காளர் ஒருவர் வாக்களித்த பிறகு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அந்த நபரை பரிசோதித்தபோது ஏவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஒட்டபாலத்தில் இன்று வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக இருந்தது.

இதேபோல் கோழிக்கோடு நகரில் வாக்குச்சாவடி எண் 16-ல் இடது ஜனநாயக முன்னணியின் வாக்குச் சாவடி முகவர் அனீஸ் அகமது (66) வாக்குச்சாவடிக்குள் சரிந்து விழுந்து உயிரிழந்தார். கோழிகோட்டில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது.

உயிரிழப்பு
உயிரிழப்பு

மலப்புரம் மாவட்டம், திரூரில் 63 வயதான மதரஸா ஆசிரியர், வாக்களித்து வீடு திரும்பிய பின்னர் மயங்கி விழுந்து இறந்தார். அப்பகுதியில் இன்று வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது.

இதேபோல் ஆலப்புழா மாவட்டத்தின் அம்பலாப்புழாவில் 76 வயது முதியவர் ஒருவர் வாக்களித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, மயங்கி விழுந்து உயிரிழந்தார். அப்பகுதியில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in