ஓட்டலில் தகராறு... தட்டிக்கேட்ட போலீஸ்காரர் அடித்துக் கொலை... 4 கபடி வீரர்கள் கைது!

கைது செய்யப்பட்டவர்களுடன் பஞ்சாப் காவல் துறை
கைது செய்யப்பட்டவர்களுடன் பஞ்சாப் காவல் துறை
Updated on
1 min read

பஞ்சாப்பில் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பில் தராமல் தகராறில் ஈடுபட்டவர்களைத் தட்டிக் கேட்ட போலீஸ்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக 4 முன்னாள் கபடி வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், பர்னாலாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் ஓட்டலில் முன்னாள் கபடி வீரர்கள் சிலர் சாப்பிட்டுள்ளனர். அப்போது பில் தருவதில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து உணவக உரிமையாளர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தலைமைக் காவலர் தர்ஷன் சிங்(50) என்பவர் கபடி வீரர்களைத் தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தலைமைக் காவலரை அடித்து உதைத்தனர். இதில் தலைமைக் காவலர் தர்ஷன் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து முன்னாள் கபடி வீரர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில் திக்ரிவாலா கிராமத்தைச் சேர்ந்த பம்மா என்ற பரம்ஜீத் சிங், ரலாசர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற ஜுக்ராஜ் சிங், சிங்வாலா கிராமத்தைச் சேர்ந்த பல்ஜீத் சிங் அம்லா மற்றும் சீமா கிராமத்தைச் சேர்ந்த குர்மீத் சிங் சீமா ஆகியோர் தான் தர்ஷன் சிங்கை அடித்துக் கொலை செய்தது எனக் கண்டறிந்தனர். அவர்களை நேற்று நள்ளிரவில் போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பம் பர்னாலாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in