கோடநாடு எஸ்டேட்
கோடநாடு எஸ்டேட்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; 4 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக 4 பேரிடம், கோவையில் சிபிசிஐடி போலீஸார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற கொள்ளை முயற்சியின் போது, ஓம்பகதூர் என்ற காவலாளி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸார் வழக்குப்பதிவு செய்து பத்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கோவை பிஆர்எஸ் வளாகம்
கோவை பிஆர்எஸ் வளாகம்

கடந்த ஆண்டு இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திய நபர்களை மீண்டும் அழைத்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்று 7 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கோடநாடு எஸ்டேட்டிலும் சிபிசிஐடி போலீஸார் சமீபத்தில் நேரடியாக ஆய்வு செய்திருந்தனர்.

கோடநாடு வழக்கில் விசாரணைக்கு ஆஜரானவர்கள்
கோடநாடு வழக்கில் விசாரணைக்கு ஆஜரானவர்கள்BG

இந்நிலையில் கோடநாடு எஸ்டேட்டில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ரமேஷ், தேவன் மற்றும் கோவையை சேர்ந்த ரவிக்குமார், அப்துல் காதர் ஆகிய 4 பேரை இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இந்த 4 பேரும் இன்று கோவையில் உள்ள பிஆர்எஸ் மைதானத்தில் சிபிசிஐடி போலீஸார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

கோடநாடு வழக்கில் விசாரணைக்கு ஆஜரானவர்கள்
கோடநாடு வழக்கில் விசாரணைக்கு ஆஜரானவர்கள்BG

அவர்களிடம் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற போது நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சாட்சியங்கள் மட்டுமின்றி, செல்போன் அழைப்புகள், குரல் பதிவுகள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை திரட்டவும் சிபிசிஐடி போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் சிபிசிஐடி போலீஸார் தங்களது விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ஈரோடு ஸ்டிராங் ரூமில் மீண்டும் பிரச்சினை... டிஜிட்டல் திரை கோளாறால் அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு

பகீர்... நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்: தமிழக மீனவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கவிஞர் வைரமுத்து உயர்ந்ததற்கு நாங்கள் போட்ட பிச்சைதான் காரணம்... கங்கை அமரன் பதிலடி!

'விடுதலை2’ நடிகர்களுக்கு சம்பள பாக்கி; ரயில் நிலையத்தில் நள்ளிரவில் வாக்குவாதம்!

பகீர்... 'தலிபான் இந்தியா தலை ஜாக்கிரதை': வீட்டுச் சுவற்றில் எழுதிய கர்நாடகா போலீஸ்காரர்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in