வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... போலீஸாரிடம் சிக்கிய 4 பேர் கும்பல்!

பலாத்காரம்
பலாத்காரம்

ஹரியாணா மாநிலம், குருகிராமில் வேலை வாங்கித் தருவதாக கூறி 35 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 35 வயது பெண், ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள சக்கர்பூர் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி வேலை தேடி வந்தார். இவர் அப்பகுதியில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை அணுகி வேலை தொடர்பாக விசாரித்துள்ளார். அந்த நிறுவனத்தை சேர்ந்த ஜெஃப்ரின் கல்கோ (எ) அருண்குமார் என்ற நபர், இந்த பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவரது தொலைபேசி எண்ணை பெற்றுள்ளார்.

பின்னர் அருண் குமார் தினமும் அந்த பெண்ணுக்கு போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். ஒரு நாள், அருண் குமார் அந்த பெண்ணை ஓரிடத்துக்கு வரவழைத்து, தன்னுடைய கூட்டாளிகள் மேலும் 3 பேருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், இதனை வெளியில் சொல்லக் கூடாது என கூறி மிரட்டலும் விடுத்துள்ளார்.

கைது
கைது

கடந்த சில நாள்களாக இந்த சம்பவத்தை வெளியே சொல்லாமல் அந்த பெண் பயத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குருகிராம், செக்டர்-29 காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரிஷிகாந்த் தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜெஃப்ரின் கல்கோ (எ) அருண்குமார், இஷுராஜ், சுமர், அஹம்ராஜ் ஆகிய 4 பேரையும் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in