சென்னையில் அதிர்ச்சி... தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் ரயில் மோதி பலி

சென்னை புறநகர் ரயில்
சென்னை புறநகர் ரயில்

சென்னையில் ரயில்வே டிராக்கை கடக்க முயன்ற 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த சிறுவர்களான சுரேஷ்(15), ரவி(12) ஆகியோர் செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகள் ஆவர். இவர்களது நண்பர் மஞ்சுநாத்(11) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர்கள் மூவரும் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்திருந்தனர்.

சிறுவர்கள் மூவரும் ஊரப்பாக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கை கடந்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் ரயில் மூன்று பேர் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ரயில் மோதி 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் பலி
ரயில் மோதி 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் பலி

மூவருக்கும் ரயில் வரும் சத்தம் கேட்காததால், இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தகவல் அறிந்த ரயில்வே போலீஸார், 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து, வேடிக்கை பார்த்தபடி வந்ததால் இந்த விபத்து நேர்ந்ததா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in