என்கவுண்டரில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை; வெளியான பரபரப்பு வீடியோ!

ஒடிசாவில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 2 நக்சல்கள் சுட்டுக்கொலை
ஒடிசாவில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 2 நக்சல்கள் சுட்டுக்கொலை

ஒடிசாவில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த இரண்டு நக்சல்கள் கொல்லப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் 21 மக்களவைத் தொகுதிகளுக்கும் வருகிற மே மாதம் 13ம் தேதி துவங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை 4 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல் 147 இடங்கள் கொண்ட சட்டப்பேரவைக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கந்தமால் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் சிலர் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் பதுங்கியிருக்கலாம் என்பதால் சோதனை தீவிரம்
மேலும் பலர் பதுங்கியிருக்கலாம் என்பதால் சோதனை தீவிரம்

கொல்லப்பட்ட நக்சல்களிடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை பறிமுதல் செய்திருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 20க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் முகாம் அமைத்திருந்ததாகவும் தற்போது மீதம் உள்ளவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு படையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in