2 பட்டியலின மாணவிகள் தற்கொலையில் திகில் திருப்பம்... கடித்த காயங்கள் உடல்களில் இருந்ததால் அதிர்ச்சி!

மர்மமான முறையில் உயிரிழந்த மாணவிகள் கொடி பவ்யா, காதே வைஷ்ணவி.
மர்மமான முறையில் உயிரிழந்த மாணவிகள் கொடி பவ்யா, காதே வைஷ்ணவி.

தெலங்கானா மாநிலத்தில் பட்டியலின மாணவிகள் நலவிடுதியில் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கில் திகில் திருப்பமாக அவர்களின் உடல்களில் கடித்த காயம் இருந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விடுதி வார்டன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நர்சம்பேட்டையைச் சேர்ந்த கொடி பவ்யா(14), காதே வைஷ்ணவி(15) ஆகிய மாணவிகள் போங்கீரில் ரெட்டிவாடாவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். நெருங்கிய தோழிகளான இவர்கள் இருவரும் புவனகிரி மாவட்டம், போங்கீரில் பட்டியலின மாணவிகள் நலவிடுதி உள்ளது.

மாணவிகள் எழுதியதாக கூறப்படும் கடிதம்
மாணவிகள் எழுதியதாக கூறப்படும் கடிதம்

இந்த நிலையில், நேற்று காலை இந்த இரண்டு மாணவிகளும் அடுத்தடுத்த விடுதி அறைகளில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் போங்கீர் பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் தங்கி இருந்த அறையில் அந்த மாணவிகள் எழுதியதாக கூறப்படும் தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டது. அதில் தங்கள் இறப்புக்கு யாரும் காரணமில்லை என்றும், இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அவர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மாணவர் சங்கத்தினர் போங்கீரில் விடுதி முன்பு போராட்டம் நடத்தினர். அந்தக் கடிதத்தில் உள்ள கையெழுத்தையும், இறந்த மாணவிகளின் கையெழுத்தையும் சரிபார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மாணவி உடலில் இருந்த காயம்
மாணவி உடலில் இருந்த காயம்

மாணவிகளின் கைகளில் கடித்த காயங்களும் உடல்களில் பல இடங்களில் காயங்களும் உள்ளதால், அவர்கள் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மாணவிகளின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

விடுதி வார்டன் சைலஜா, ஆட்டோ ஓட்டுநர் ஆஞ்சநேயலு, விடுதி சமையலர்கள் சுஜாதா, சுலோக்சனா, உடற்கல்வி ஆசிரியை பிரதீபா, டியூசன் ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோர் மீது சிஆர்பிசி 174 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்பு, அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பட்டியலின மாணவிகள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in