உ.பி.யில் முஸ்லிம் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்... வைரல் வீடியோவால் 2 பேர் கைது!

முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்
முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்

உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் பலரைத் தேடி வருகின்றனர்.

இளைஞர் மீது தாக்குதல்
இளைஞர் மீது தாக்குதல்

உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கண்ட்லா கிராமத்தில் டூவீலரில் இளைஞர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பத்துக்கும் மேற்பட்டோர் தடி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர். வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அந்த இளைஞர் மீது அந்தக் கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்துகிறது. அவர் மயக்கமடையும் வரை அந்தக் கும்பல் தடிகளால் தாக்கி விட்டு தப்பியோடி விடுகிறது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் நேற்று வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கும்பலால் தாக்குதலுக்கானவர் ரிஸ்வான் என்று விசாரணையில் தெரிய வந்தது. அவரைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பந்தமாக இருவரை கைது செய்துள்ளதாக போலீஸார், இன்று தெரிவித்துள்ளனர். மற்ற குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கண்காணிப்பாளர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in