ரூ.1.36 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு- மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு
ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு

நடப்பாண்டில் 1.36 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நிதித்துறை அமைச்சகம் மற்றும் ஜிஎஸ்டி இயக்குனரக நுண்ணறிவு பிரிவு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜிஎஸ்டி வரி முறையாக செலுத்தப்படுகிறதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 1.36 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஜிஎஸ்டி முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 2020 முதல் இதுவரை 57 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 6 ஆயிரம் முறைகேடு வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த வரி ஏய்ப்பு புகாரில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு
ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு

இதன் மூலம் 2023-24ம் ஆண்டுகளில் மட்டும் 1.36 லட்சம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாகவும், இது குறித்து தகவல் வெளியானதை தொடர்ந்து ரூ.14,108 கோடி வரி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள், தொழில்துறையினரிடம் கடன் வாங்கித்தருவதாகவும், கமிஷன் வழங்குவதாகவும் கூறி, அவர்களிடமிருந்து ஆதார், பான் கார்டு உள்ளிட்ட கேஒய்சி ஆவணங்களை பெற்றுள்ளனர். பின்னர் போலி நிறுவனங்களை அவர்களுக்கே தெரியாமல் துவக்கி, அதன் மூலம் இந்த வரி ஏய்ப்பு முறைகேடுகளில் அவர்கள் ஈடுபட்டு வந்திருப்பதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு
ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in