பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ பட டீசர் இணையத்தில் கசிந்தது... படக்குழு அதிர்ச்சி!

‘கல்கி 2898ஏடி’
‘கல்கி 2898ஏடி’

நடிகர்கள் பிரபாஸ் தற்போது நடித்து வரக்கூடிய ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது.

நடிகர்கள் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே என இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. இந்தப் படத்தை அஸ்வின் நாக் இயக்கி வருகிறார். பான் வேர்ல்ட் படமாக உருவாகி வரக்கூடிய இந்தப் படம் அறிவியல் சப்ஜெக்ட்டை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. ’பாகுபலி2’ மட்டுமே பிரபாஸூக்கு வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால், அதன் பிறகு வெளியான ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தது. எனவே இப்போது அவர் நடித்து வரக்கூடிய ‘கல்கி 2898 ஏடி’ படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதன் தொடக்க விழா அமெரிக்காவில் நடந்தது. மேலும், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சூழலில், இப்படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து சில போஸ்டர்கள் இணையதளத்தில் கசிந்தது. படத்தின் வி.எஃப்.எக்ஸ் வேலைகள்  நடைபெறும் இடத்தில் இருந்து இந்த புகைப்படங்கள் வெளியானதாக படக்குழு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து  தற்போது படத்தின் டீசரில் இருந்து சில காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி இருக்கின்றன. மும்பையில் ஐஐடியில் நடைபெற்ற டெக்ஃபெஸ்ட் நிகழ்ச்சியில் இயக்குநர் நாக் அஸ்வின் கலந்துகொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் ’கல்கி 2898 ஏடி’ படத்தில் பயன்படுத்தப் படும் தொழில்நுட்பங்கள் பற்றிய விரிவுரையை அவர் மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். அப்போது, இந்தப் படத்தின் டீசர் சிறப்பு திரையிடலாக மாணவர்கள் மத்தியில் போட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் காட்சிகளைத் தான் மாணவர்கள் தங்களது செல்ஃபோனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் அப்லோட் செய்துள்ளார்கள். இந்த காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...


2024-ல் தேர்தலைச் சந்திக்கும் 40 நாடுகள்... இந்தியாவுக்கு இந்தத் தேர்தல் எத்தனை முக்கியம்?

புத்தாண்டு பரிசு... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட்!

ஆபாசமாக உடை அணிந்த மனைவி; கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்: திருமணமான 6 மாதத்தில் பயங்கரம்!

அதிர்ச்சி... மாணவியைக் கடத்தி கூட்டுப் பலாத்காரம்: வீடியோ எடுத்து ரசித்த பாஜக நிர்வாகிகள் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in