நீங்க மட்டும் தான் படம் ரிலீஸ் பண்ணி சம்பாதிக்க வேண்டுமா?.... உதயநிதி தயாரிப்பு நிறுவனம் மீது விஷால் பாய்ச்சல்!

விஷால், உதயநிதி ஸ்டாலின்
விஷால், உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் குறித்து நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு செப்.15-ம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படம் வெளியானது. இந்த படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா உள்பட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில், இந்த படம் ரிலீஸாக மிகப்பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை கடுமையாக குற்றம் சாட்டி நடிகர் விஷால் நேர்காணல் ஒன்றில் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட நபர் மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். ஒரு படம் வந்து தள்ளிப்போக வேண்டும் என சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. சினிமாவை யாரும் உரிமை கொள்ள முடியாது. சினிமா என் கையில் இருக்கு என சொன்ன யாரும் உருப்பட்டதாக சரித்திரமே கிடையாது.

என்னுடைய தயாரிப்பாளர் வட்டிக்கு கடன் வாங்குபவராக இருக்கிறார். சும்மா ஏ.சி ரூம்ல உட்கார்ந்து கொண்டு தியேட்டரை போடு, படத்தை ரிலீஸ் பண்ணுன்னு சொல்லும் நபரில்லை. வட்டிக்கு பணம் வாங்கி, வியர்வையை சிந்தி, ரத்தத்தை சிந்தி ஒரு படம் எடுத்தால், ரிலீஸ் தேதியைத் தள்ளிப்போடுங்கள் என சொல்ல நீங்கள் யார் எனப் புரியவில்லை. நீங்கள் தான் சினிமாவை குத்தகை எடுத்துள்ளீர்களா? என நான் ஒரு நபரிடம் கேட்டேன்.

உதயநிதியுடன் விஷால்
உதயநிதியுடன் விஷால்

அவரை, நான் தான் உதயநிதி ஸ்டாலினிடம் சேர்த்து விட்டேன். அவரே வந்து இந்த மாதிரி விஷயம் பண்ணும்போது ஜீரணிக்க முடியவில்லை. என்னுடைய தயாரிப்பாளர் 'மார்க் ஆண்டனி' படத்துக்காக ரூ.65 கோடி செலவழித்துள்ளார். அப்படத்தை செப்டம்பர் 15-ம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என ஒன்றரை மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து விட்டார். நீங்கள் என்னுடைய தயாரிப்பாளரிடம் இந்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என சொல்ல உரிமை கிடையாது. அவர் வெளியே கடன் வாங்கி படம் பண்ணிருக்காரு. எப்ப ரிலீஸ் பண்ண வேண்டும் என அவருக்குத் தெரியும்.

நீயும் ரிலீஸ் பண்ணு, நானும் ரிலீஸ் பண்ணு.நீங்க மட்டும் தான் ரிலீஸ் பண்ணி சம்பாதிக்க வேண்டும் என ரூல்ஸ் இருக்கா? இதன் காரணமாக என்னால் முடியாது என சொல்லி விட்டேன். பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை. 'மார்க் ஆண்டனி' படம் தயாரிப்பாளர், ஆதிக் ரவிச்சந்திரன், எனக்கும் ஒரு நல்ல திருப்பமாக அமைந்தது. நான் சும்மா இருந்திருந்தால் இந்த படம் ரிலீஸாகி இருக்காது. 'ரத்னம்' படத்துக்கும் கூட பிரச்சினை வரலாம். இதை சொல்ல யாருக்கும் தைரியம் கிடையாது” என தெரிவித்துள்ளார்.

நடிகர்  விஷால்
நடிகர் விஷால்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மீது நடிகர் விஷால் கூறியுள்ள இந்த பரபரப்பு குற்றச்சாட்டுகள் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அமைச்சராகும் முன்பு வரை படத்தயாரிப்பில் ஈடுபட்டு வந்த உதயநிதி ஸ்டாலின், அதன்பின் அந்த பணிகளை விட்டுவிட்டதாக 'மாமன்னன்' பட விழாவில் தெரிவித்திருந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

 சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in