விஜய் அரசியல் வருகை நல்லது... அரசியல்வாதிகளே பெரிய விஷயமா பார்க்குறாங்க... இயக்குநர் ஹரி பேட்டி!

விஜய் அரசியல் வருகை நல்லது... அரசியல்வாதிகளே பெரிய விஷயமா பார்க்குறாங்க... இயக்குநர் ஹரி பேட்டி!
படம் : சண்முகவடிவேல்

நடிகர் விஜய், மக்களுக்காக சேவை செய்யப் போவதாக சொல்வது போற்றப்பட வேண்டிய வார்த்தை என இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படம் வரும் 26ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் மற்றும் டீசர் வெளியீட்டுக்காக, இன்று திருச்சி வந்திருந்த இயக்குநர் ஹரி, யின்காட் கேட் பகுதியில் உள்ள எல்.ஏ திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், "தரமான படத்தை கொடுக்க‌ 20 வருடமானாலும் பரவாயில்லை. நாங்கள் பார்க்க தயாராக இருக்கிறோம் என்று ஆடியன்ஸ் தயாராகி விட்டார்கள். எனவே, நல்ல படங்களை கொடுக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இந்த படம் நானும், விஷாலும் இணைந்து பணியாற்றும் 3வது படம். படத்தில் ஒவ்வொரு சண்டை காட்சிகளையும் மிகவும் விறுவிறுப்பாக செய்துள்ளோம். முகம் சுழிப்பது போல் எதுவும் இருக்காது.

எனவே, குடும்பத்துடன் இந்த படத்தைப் பார்க்கலாம். விஜய்யின் கால்ஷீட் கிடைத்தால், அவரை வைத்து திரைப்படம் எடுத்து விடுவேன். கதையெல்லாம் தயாராக தான் உள்ளது. அவரே சொல்லி இருக்கிறார், முதலில் மக்கள் சேவை செய்துவிட்டு, அடுத்தது சினிமாவுக்கு செல்கிறேன் என்று.

அரசியல் நல்லது தான். இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் ஒரு நடிகர், சேவை செய்யப் போவதாக சொல்வது போற்றப்பட வேண்டிய வார்த்தை. இதனை அரசியல்வாதிகளே பெரிய விஷயமாகக் கருதுகின்றனர். அவர் நல்லபடியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்‌. விஷால் அரசியலுக்கு வருவது குறித்து எனக்குத் தெளிவாக தெரியாது. அவர் அதை வேறு விதமாக சொல்லியுள்ளார்.

இயக்குநர் ஹரி- விஷால்
இயக்குநர் ஹரி- விஷால்

ரத்தினம் படத்தில் 4 சண்டை பயிற்சியாளர்களைக் கொண்டு காட்சி அமைக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் உள்ளது. இந்த மாஸ்டரை வைத்து குறிப்பிட்ட சண்டைக் காட்சிகளை செய்தால் நன்றாக இருக்கும் என்பது ஒரு காரணம். மற்றொன்று, ஒரே ஷெட்யூலில் அனைத்து காட்சிகளையும் முடிக்க வேண்டிய சூழல் இருந்ததால், ஒவ்வொருவராக பயன்படுத்திக் கொண்டோம்.

சிங்கம் திரைப்படத்தை மூன்றாவது பாகத்துடன் நிறுத்தியதற்கு காரணம், மூன்று என்பது நல்ல ரவுண்டாக இருந்தது. எனவே, அப்படியே நிறுத்திக் கொண்டேன். ஆனால், இன்னொரு போலீஸ் படம் விரைவில் எடுக்க உள்ளேன். ஹிந்தியிலும், தெலுங்கிலும் என்னை படத்திற்காக அழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கேயே நிறைய தயாரிப்பாளர்களும், நடிகர்களும் வாய்ப்பு வழங்குகிறார்கள்.

எனவே, இதற்கே நேரம் சரியாக உள்ளது. பலர் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சூழல் ஏற்பட்டால், அதற்கான நேரம் கிடைத்தால் ஹிந்தி, தெலுங்கு, கன்னடத்திலும் இயக்குவேன். துரைசிங்கத்தை சிங்கம் என சுருக்கி படத்திற்கு பெயர் வைத்தோம். அதன் பின்னர், பரணியை தாமிரபரணி என பெரிதாக்கி பெயர் வைத்தோம்.

இப்போது, ரத்னம் என்ற ஹீரோவின் பெயரையே படத்தின் பெயராக வைத்து விட்டோம். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்கு இன்டைரக்டாக பெயர் வைத்த நிலையில், இதற்கு நேரடியாக பெயர் வைத்ததற்கு காரணம், விஷாலின் தற்போதைய வளர்ச்சி தான்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in