’சத்ரபதி சம்பாஜி மகாராஜா’வின் பர்ஸ்ட் லுக் லீக்கானது... ரசிகர்கள் கொண்டாட்டம்!

’சத்ரபதி சம்பாஜி மகாராஜா’வின் பர்ஸ்ட் லுக் லீக்கானது... ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விக்கி கௌஷல் நடித்து வரும் ’சாவா’ படத்தின் சத்ரபதி சாம்பாஜி மகாராஜா கெட்டப்பிலான புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல் பீரியட் டிராமா படமான ‘சாவா’வில் நடித்து வருகிறார். இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மராட்டியப் பேரரசை நிறுவிய சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மூத்த மகனான சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் காதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்து வருகிறார்.

சாம்பாஜி மகாராஜின் துணிச்சல், தியாகம், போர்க்கால உத்திகள் மற்றும் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே இருந்த உணர்ச்சிகரமான காதல் போன்ற விஷயங்கள் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது இப்படத்தில் இருந்து விக்கியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படங்களில் விக்கி பழுப்பு நிற உடையில் ருத்ராக்ஷம் அணிந்து மற்றும் சிவப்பு நிறத்தில் இடுப்பில் அணிந்த உடையுடன் காணப்படுகிறார். இதுமட்டுமல்லாது முனிவர்கள் போல தோள்பட்டை வரையிலான முடி, அடர் தாடி, நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் காணப்படுகிறார்.

சமீபத்தில், ராஷ்மிகா தனது போர்ஷனுக்கான படப்பிடிப்பை முடித்துள்ளார். கீர்த்தி சனோன் நடித்த ’மிமி’ (2021), ’லுகா சுப்பி’ (2019) மற்றும் பல திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் லக்ஷ்மன் உதேகர் இயக்கிய படம் ’சாவா’. உதேகர் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் ’ஜாரா ஹட்கே ஜாரா பச்கே’ (2023) திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்து பணியாற்றுகிறார்கள். இந்தப் படம் இந்த வருடம் டிசம்பர் 6ம் தேதி ரிலீஸாகும் வகையில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in