#தலைவர்171|ரோலக்ஸ் முன்கதையில் ரஜினியின் கூலி? டீசர் வெளியீட்டில் பரபரக்கும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்!

’கூலி’ ரஜினி காந்த்
’கூலி’ ரஜினி காந்த்

ரஜினியின் ’தலைவர் 171’ திரைப்படத்துக்கான டீசர் மற்றும் படத்தலைப்பு வெளியானதில், ரஜினி காந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வரவேற்று வருகின்றனர்.

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கத்திலான ‘வேட்டையன்’ திரைப்படத்தில் ரஜினி காந்த் நடித்து வருகிறார். இரண்டுக்கும் இடையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பிப்ரவரியில் வெளியான ’லால் சலாம்’ தோல்வியடைந்தது. கௌரவ தோற்றத்தில் இதில் தோன்றிய ரஜினியும் ரசிகர்களை ஏமாற்றினார்.

’கூலி’ ரஜினி காந்த்
’கூலி’ ரஜினி காந்த்

முன்னதாக ’ஜெயிலர்’ வெற்றியைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் ரஜினி காந்த் கைகோக்கும் தலைவர் 171 படத்துக்கான அறிவிப்பு வெளியானது. லேகேஷ் கனராஜ் இயக்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது. ரஜினி - லோகேஷ் கூட்டணி குறித்து அப்போது முதலே எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.

தற்போது ’வேட்டையன்’ பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தலைவர் 171 படத்துக்கான டைட்டில் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டது. படத்தின் டைட்டிலாக ’கூலி’ என்பது அறிவிக்கப்பட்டது.

தங்கம் தொடர்பான வாட்ச் உள்ளிட்ட பொருட்களுடன் நிழலான தொழிலில் ஈடுபட்டிருக்கும் மர்ம கும்பல் மத்தியில் ரஜினி காந்த் என்ட்ரி கொடுப்பதும், பஞ்ச் டயலாக்ஸ் மத்தியில் அடியாட்களை அதகளம் செய்வதும் டீசராக இடம்பெற்றுள்ளது.

’கூலி’ ரஜினி காந்த்
’கூலி’ ரஜினி காந்த்

இந்த டீசர் வெளியான ஓரிரு மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்ததில், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ரசிகர்கள், டீசரை பிரித்து மேய்ந்து வருகின்றனர். டீசரில் ஒளிந்திருக்கும் கூறுகள் பலவற்றிலிருந்து இது சூர்யா தோன்றவிருக்கும் ’ரோலக்ஸ்’ கதைக்கு முன்வருவது எனவும் தாங்களாக சுவாரசிய கதைகளை பரப்பி வருகின்றனர்.

கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலான ’விக்ரம்’ திரைப்படம், சூர்யா நடிப்பில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிலான ‘ரோலக்ஸ்’ திரைப்படத்துக்கு வித்திட்டது. கார்த்தி நடிப்பிலான கைதி -2 திரைப்படத்தை முடித்தப் பின்னர் லோகேஷ் கனகராஜ், சூர்யாவின் ரோலக்ஸை எடுப்பார் எனவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாயின. இவை அனைத்துமாக, லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முன்கதைகளை விளக்கும், குறும்படத்துக்கான எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளன.

இவற்றை முன்வைத்து இணையத்தில் விவாதிக்கப்படும் சுவாரசிங்களை ஒருங்கிணைத்தே லோகேஷ் கனகராஜ், தனது அடுத்த திரைப்படத்தை திட்டமிடலாம் என்றளவுக்கு அவை குவிந்துள்ளன. இந்த வரிசையில் தற்போதைய ரஜினியின் கூலி படத்துக்கான டைட்டில் டீசரும், எல்சியூ எதிர்பார்ப்புகளை எகிறச் செய்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மதுரை சித்திரைத் திருவிழா... மீனாட்சி தேரோட்டம் - அழகர் புறப்பாடு - சிறப்பு புகைப்படத் தொகுப்பு!

வாக்குப்பதிவு விவரங்களை செல்போனில் அறிந்து கொள்ளலாம்... புதிய செயலியை அறிமுகம் செய்தது தேர்தல் ஆணையம்!

பகீர்... ஓடும் கார் கதவில் தொங்கியபடி சாகசம்! உயிரை பணயம் வைத்து இன்ஸ்டா வீடியோ!

முஸ்லிம்களை தொடர்புபடுத்தி சர்ச்சை கருத்து... பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கபில் சிபல் வலியுறுத்தல்!

காங்கிரஸ் செய்த பாவங்களுக்காக நாடு தண்டிக்கிறது... பிரதமர் மோடி சாபம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in