சோனியா காந்தியாக நடிக்கும் ஜெர்மன் நடிகை: அசத்தல் அப்டேட்!

சுசானே பெர்னார்ட்டின்
சுசானே பெர்னார்ட்டின்
Updated on
1 min read

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தியின் கதாபாத்திரத்தில் ஜெர்மன் நடிகை ஒருவர் நடிக்கிறார். இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அச்சு அசலாக சோனியா காந்தி போலவே அவர் இருக்கிறார் எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி ’யாத்ரா’ என்ற படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில், ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இப்பாகம் ஆந்திர முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆரின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. ஜெகன் மோகன் ரெட்டியாக நடிகர் ஜீவா நடிக்கிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

இந்நிலையில், இந்த படத்தில் சோனியா காந்தியாக ஜெர்மன் நடிகை சுசானே பெர்னார்ட் நடிக்கிறார். இவர் பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மறைந்த நடிகர் அகில் மிஸ்ராவின் மனைவி ஆவார்.

சுசானே பெர்னார்ட்டின், சோனியா காந்தி கதாபாத்திர புகைப்படத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் ‘யாத்ரா2’ வெளியாக இருக்கும் நிலையில் சோனியா காந்தியின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in