சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக பணம் வசூல்; நடிகை வித்யாபாலன் பெயரில் புதிய மோசடி!

நடிகை வித்யா பாலன்
நடிகை வித்யா பாலன்

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி பலரிடம், நடிகை வித்யாபாலன் பெயரில் பணமோசடி நடந்துள்ளது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நடிகை வித்யாபாலன்
நடிகை வித்யாபாலன்

பிரபலங்கள் என்றாலே புகழ் கிடைக்கும் அளவுக்கு சர்ச்சைகளும் பின் தொடர்வது வழக்கம். குறிப்பாக, இந்த டிஜிட்டல் யுகத்தில், பிரபலங்கல் பெயரில் போலியாக கணக்கு ஆரம்பித்து பல்வேறு நிதி மோசடிகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற ஒரு மோசடியில், பாலிவுட் நடிகை வித்யாபாலனும் சிக்கி இருக்கிறார். கேரளாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தமிழில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ உள்ளிட்ட ஒருசில படங்களிலேயே நடித்துள்ளார்.

நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருது வென்றார். தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும்படியான படங்களையே இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இந்தியில் ’தோ அவுர் தோ ப்யார்’ என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது.  

நடிகை வித்யாபாலன்
நடிகை வித்யாபாலன்

இந்நிலையில், நடிகை வித்யாபாலன் பெயரில் போலி சமூக வலைதளக் கணக்குகள் தொடங்கி பணமோசடி நடந்துள்ளது. அவரது பெயரில் போலி மின்னஞ்சல், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம், சினிமா துறையைச் சேர்ந்த நபர்களை அணுகி வாய்ப்புகள் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வித்யாபாலனின் நெருங்கிய வட்டாரத்தினரைக் குறிவைத்தே இந்த மோசடி நடந்துள்ளது.

இதை அறிந்த வித்யாபாலன், இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த ஒருமாதத்திற்கு முன்பு இதேபோன்று வாட்ஸப்பில் தன் புகைப்படத்தைப் பயன்படுத்தி மோசடி நடப்பதாகவும், அந்தக் கணக்குத் தன்னுடையது இல்லை எனவும் நடிகை வித்யாபாலன் தெளிவுப்படுத்தி இருந்தார்.

இதையும் வாசிக்கலாமே...


நடிகை நயன்தாராவுக்கு தாதா சாகேப் பால்கே விருது... குவியும் வாழ்த்து!

முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு உடைகள்: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை கடந்து செல்ல விவசாயிகள் அதிரடி!

பெற்றோர்களின் கவனத்திற்கு... மார்ச்.3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்...

கோர விபத்து... லாரி - ஆட்டோ மோதி 8 பேர் பலியான சோகம்!

மார்ச் 31 வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை நீட்டிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in