ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விஜய்சேதுபதி... காரணம் இதுதான்!

ரஜினிகாந்த்- விஜய்சேதுபதி
ரஜினிகாந்த்- விஜய்சேதுபதி

நடிகர் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் கதையின் நாயகனாக அறிமுகமான நடிகர் விஜய் சேதுபதி, கமர்ஷியல் ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரங்கள் என கோலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என பல தளங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், ‘லியோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ‘தலைவர் 171’ படத்திற்கான திரைக்கதை பணியில் இருக்கிறார். இந்தப் படத்தில்தான் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க அணுகி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கெனவே, ‘விக்ரம்’ படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

'தலைவர் 171’
'தலைவர் 171’

அதை மனதில் வைத்தே விஜய்சேதுபதியை ரஜினிக்கு வில்லனாக முயற்சித்திருக்கிறார் லோகேஷ். ஆனால், இனிமேல் வில்லனாக நடிக்கக் கூடாது என முடிவெடுத்திருக்கும் விஜய்சேதுபதி இந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார். மேலும், அவர் கேட்ட சம்பளமும் இந்த வாய்ப்பு அவருக்கு கைகூடாமல் போனதற்கு முக்கிய காரணமாகவும் சொல்லப்படுகிறது. இதற்கடுத்துதான், லாரன்ஸிடம் இந்த வாய்ப்பு போனதாக தகவல் வெளியானது. அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருக்கும் இந்தப் படத்தின் நடிகர்கள் குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in