
விஜய் - வெங்கட் பிரபு இணையும் ’தளபதி 68’ திரைப்படத்துக்கான பூஜை வீடியோ இன்று வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ’லியோ’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக, விஜய் அடுத்து நடிக்கும் திரைப்படம் ’தளபதி 68’. மங்காத்தா வெற்றி முதலே, ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்குரிய வெங்கட் பிரபு - விஜய் கூட்டணி ஒருவழியாக அரங்கேறி இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம் பூஜை வைபவத்தை தொடர்ந்து படப்பிடிப்பில் மும்முரமாகி உள்ளது.
விஜய் உடன் பிரசாந்த், பிரபு தேவா, லைலா, சிநேகா என 90களின் பிரபல நட்சத்திரங்கள் தளபதி 68ல் இணைகிறார்கள். இதனை வெகுவாக பகிரும் நெட்டிசன்கள், திரைப்படத்தின் கதைப்போக்கை சொல்லும் குறியீடு இதுதான் என்றெல்லாம் குதூகலித்து வருகிறார்கள். ’தளபதி 68-ல் விஜய்க்கு ரெட்டை வேடம், அதில் சீனியர் விஜய் உடன் இவர்கள் எல்லாம் இணைந்திருப்பார்கள்’ என, கோலிவுட் அப்டேட் விற்பன்னர்களின் பேட்டிகளை மேற்கோள்காட்டி பதிவுகளை தட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் தளபதி 68 திரைப்படத்துக்கான பூஜை வைபவத்தின் வீடியோ இன்று வெளியாகி, ரசிகர்களின் குதூகலத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. இன்னும் இளமை, மேலும் கூல், மென்மேலும் எளிமை என பட பூஜையில் தோற்றமளித்த விஜய்யை அவரது ரசிகர்களுக்கு அப்பாலும் பொதுவெளியில் கொண்டாடி வருகின்றனர். அரசியலில் குதிக்கப்போகிறார், சினிமாவுக்கு இடைவேளை விடப்போகிறார் என்றெல்லாம் வலம் வந்த செய்திகளை புறந்தள்ளும் வகையில், விஜய்யின் வைப் அனைவரையும் கவர்ந்தது.
கணிசமான இடைவெளிக்குப் பின்னர் யுவன் சங்கர் ராஜா மீண்டும் விஜய்யுடன் இணைந்திருப்பதாலும், தளபதி 68 மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. அந்த எதிர்பார்ப்புக்கு தீனியிடுவது போன்று, பூஜை வீடியோவின் பின்னணியில் படத்துக்கான பிஜிஎம் ஒன்றும் தடதடத்து வசீகரிக்கிறது. இன்னமும் ‘லியோ’ வெளியீட்டு கொண்டாட்டத்தில் இருந்தே முற்றிலுமாக விடுபடாத விஜய் ரசிகர்கள், ’தளபதி 68’ திரைப்படத்துக்கான அப்டேட்டுகளால் தீபாவளி கொண்டாட்டத்தை அட்வான்ஸாக எட்டியிருக்கிறார்கள்.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!
உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்
ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு