கமல் சென்டிமென்டை ரஜினி படத்திலும் கொண்டு வரும் லோகேஷ்... ’தலைவர் 171’ பட டைட்டில் இதுவா?

கமல் சென்டிமென்டை ரஜினி படத்திலும் கொண்டு வரும் லோகேஷ்... ’தலைவர் 171’ பட டைட்டில் இதுவா?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்ற ஊகம் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்து விட்டது. அந்த வகையில், படத்தின் டைட்டில் இதுதான் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

‘தலைவர் 171’
‘தலைவர் 171’

’வேட்டையன்’ படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருக்கிறது. படத்தின் டைட்டில் டீசர் இந்த மாதம் 22-ம் தேதி வெளியாகும் என போஸ்டருடன் அறிவித்தார் லோகேஷ். அந்த பிளாக் அண்ட் வொயிட் போஸ்டரில் ரெட்ரோ லுக்கில் நடிகர் ரஜினிகாந்த், கையில் வாட்சினாலான கைவிலங்குடன் இருந்தார்.

உடனே, படம் டைம் டிராவல் குறித்தானதா, ‘லியோ’ ரோலக்ஸின் தந்தைதான் ரஜினிகாந்தா, லோகேஷின் ‘இரும்புக்கை மாயாவி’ படக் கதையா?' என்ற ரீதியில் ரசிகர்கள் டீகோட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால், ”இதெல்லாம் எதுவுமில்லாமல் புதுமாதிரியான ரஜினியை இதில் பார்க்கலாம்” என்று சொன்னார் இயக்குநர் லோகேஷ்.

’தலைவர் 171’
’தலைவர் 171’

மேலும், படத்தின் டைட்டில் டீசர் இந்த மாதம் 22-ம் தேதி வெளியாகும் என சொன்னவுடன் ‘இதுவா...அதுவா...’ என இணையத்தில் விவாதங்களும் ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் ‘கழுகு’ அல்லது அதன் ஆங்கில வார்த்தையான ‘ஈகிள்’ இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் இதே தலைப்பில் கடந்த 1981-ம் ஆண்டில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஒரு படம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல்ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக இணைந்த படத்திற்கு ‘விக்ரம்’ எனப் பெயரிட்டிருந்தார். இந்தத் தலைப்பிலும் கமல் அதற்கு முன்பு படம் நடித்திருந்தாலும் அதே தலைப்பை புதிய படத்திற்கும் வைத்து ஹிட்டாக்கினார் லோகேஷ். இதே சென்டிமென்டை பின்பற்றித்தான் ரஜினியுடன் முதல் முறையாக இணைந்துள்ள படத்திற்கும் ‘கழுகு’ என்ற டைட்டிலை லோகேஷ் பரிசீலித்திருக்கலாம் என்கிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...  


வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு... புதிய நிதி ஆண்டு இன்று தொடக்கம்!

தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in