’குக் வித் கோமாளி’ அவ்வளவு தானா?! களமிறங்கிய சன் டிவி; ட்ரெண்டாகும் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

’குக் வித் கோமாளி’ அவ்வளவு தானா?! களமிறங்கிய சன் டிவி; ட்ரெண்டாகும் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியைக் காப்பி அடித்து ‘டாப் குக்கு டூப் குக்கு’ என்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியைத் தொடங்கி இருக்கிறது சன் தொலைக்காட்சி. இதன் புரோமோ தற்போது வெளியாகி இருக்கும் நிலையில், ரசிகர்கள் இந்நிகழ்ச்சியைக் கலாய்த்து வருகின்றனர்.

சின்னத்திரையில் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி ஹிட்டடித்தால் வெவ்வேறு சேனல்களில் அதேபோன்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதைப் பார்க்கலாம். அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டடித்த ‘குக் வித் கோமாளி’ சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியைக் காப்பியடித்து ’டாப் குக்கு டூப் குக்’ நிகழ்ச்சியை களமிறக்கி இருக்கிறது சன் தொலைக்காட்சி.

'குக் வித் கோமாளி’
'குக் வித் கோமாளி’

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களிலும் நடுவராக இருந்த வெங்கடேஷ்பட் அந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இவர் மட்டுமல்லாமல், நிகழ்ச்சியை இயக்கிய இயக்குநர் மணி, தயாரித்த மீடியா மேசன் என நிகழ்ச்சியின் தூண்களாக இருந்த அனைவருமே விலகுவதாக அறிவித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விரைவில் புது நிகழ்ச்சியில் சந்திப்போம் என வெங்கடேஷ் பட் சொல்லியிருந்தார்.

அந்த வகையில், நேற்று முன்தினம் ‘குக் வித் கோமாளி சீசன்5’ தொடங்கியது. இதனையடுத்து, இந்த நிகழ்ச்சிக்குப் போட்டியாக இந்த நிகழ்ச்சியில் முன்பு பங்கேற்ற பல போட்டியாளர்களை களமிறக்கி ’டாப் குக்கு டூப் குக்’ என்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கான புரோமோவை வெளியிட்டுள்ளது சன் தொலைக்காட்சி.

நிகழ்ச்சியில் நடுவராக வெங்கடேஷ் பட் களம் இறங்கியுள்ளார். டூப்பு குக்காக ஜி.பி முத்து, மோனிஷா பிளஸி, தீனா, தீபா, பரத் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். முன்பு சன் தொலைக்காட்சி ‘மாஸ்டர் செஃப் தமிழ்’ நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. ஆனால், அது ரசிகர்களைப் பெரியளவில் கவரவில்லை. இதனால், ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியின் அடுத்த சீசனை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பாமல் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியைப் போலவே புது நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.

மேலும், ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இந்த சீசன் தொடக்கத்தில் தன்னைப் பற்றி பேசவில்லை எனவும் இணையத்தில் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார் வெங்கடேஷ் பட். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை காப்பியடித்துள்ள இந்தப் புது நிகழ்ச்சியைப் பார்த்து ’காப்பி அடிப்பதில் அட்லியையே தூக்கி சாப்பிட்டு விட்டது சன் டிவி’ என கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

இதையும் வாசிக்கலாமே...


ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!

தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!

தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!

அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!

பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in