’ஆல் இஸ் வெல்’... அஜித்தின் புகைப்படத்தை பகிர்ந்த ஷாலினி!

நடிகர் அஜித்
நடிகர் அஜித்

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடிகர் அஜித் எப்படி இருக்கிறார் என ரசிகர்கள் தவித்து வந்த நிலையில் நடிகை ஷாலினி, அஜித்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கேஷூவலாக மகனுடன் அஜித் இருக்கும் இந்த புகைப்படம்தான் இணையத்தில் தற்போது வைரல்.

நடிகர் அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை, மருத்துவமனையில் இருக்கிறார் எனப் பல்வேறு செய்திகள் கடந்த சில நாட்களாகக் கிளம்பியது. ஆனால், முழு உடல் பரிசோதனைக்காக அவர் சென்றபோது காதுக்குக் கீழே உள்ள நரம்பில் வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இந்த மைனர் அறுவை சிகிச்சை முடிந்து அஜித் நலமுடன் வீடு திரும்பி விட்டார் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். என்னதான் அஜித் நலமுடன் இருக்கிறார் என செய்தி வந்தாலும், அவர் எப்படி இருக்கிறார் எனப் பார்ப்பதற்கு ரசிகர்கள் தவித்து வந்தனர்.

அஜித் குமார்
அஜித் குமார்

ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஷாலினி, அஜித்தின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். மகன் ஆத்விக் அருகில் அமர்ந்து அவருக்கு கேஷூவலாக ஷூ மாட்டி விடுகிறார் அஜித். இதனைப் பார்த்து ரசிகர்கள் ’ஆல் ஈஸ் வெல்’ என நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.

வருகிற 18ஆம் தேதி ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் மீண்டும் தொடங்க இருப்பதால், அஜித் அதில் பங்கேற்பாரா? என்ன அப்டேட் எனவும் ஷாலினியின் இந்த போஸ்ட்டில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் அஜித் பூரண ஓய்வில் இருந்துவிட்டு படப்பிடிப்பிற்கு செல்லட்டும் எனவும் சொல்லி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அரசில் 314 பணியிடங்கள் காலி... மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி... ஓபிஎஸ் உறுதியால் சின்னம் முடங்குமா?

பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்... 45 நாட்களுக்கு கோடை விடுமுறை!

சிஎஸ்கே அணிக்கு 'தல' தோனிக்குப் பிறகு யாரு கேப்டன்?... செயல் அதிகாரி கொடுத்த ட்விஸ்ட்!

விடிய, விடிய பேச்சுவார்த்தை... பாஜக அணியில் டி.டி.வி. தினகரனுக்கு 4, ஓபிஎஸ்சுக்கு 2 தொகுதிகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in