பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்... 45 நாட்களுக்கு கோடை விடுமுறை!

மத்தியப்பிரதேச மாநில அரசு
மத்தியப்பிரதேச மாநில அரசு

கடும் வெப்பம் சுட்டெரிக்கும் நிலையில் மாணவர்களின் மனநிலையை குளிர்ச்சியாக்கும் வகையில்  மத்தியப் பிரதேச மாநிலத்தில் பள்ளிகளுக்கு 45 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு கோடைகாலம்  தொடங்குவதற்கு முன்பிருந்தே  நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களிலும் 100 டிகிரியைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்த நிலையில் மதிய நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையமும் அறிவுறுத்தி. வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் தற்போது நிலவும் கடும் வெப்பநிலையால் தகித்து வருகின்றனர்.

வழக்கமாக கோடைகாலத்தில் பள்ளிகளுக்கு ஒருமாதம்  கோடை  விடுமுறை வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு கோடை மிகவும் கடுமையாக இருப்பதால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒன்றரை மாதங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு பொருந்தும் வகையில் மத்தியப் பிரதேச கல்வித்துறை விடுமுறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு  கோடைகால விடுமுறைகள் மே 1-ம் தேதி  தொடங்கி ஜூன்15-ம் தேதி வரை மொத்தம் 45 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள் மே 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை விடுமுறையில் இருப்பார்கள். அந்த நாட்களில் அவர்கள் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட வழக்கமான பணிகளை கவனிப்பார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் விடுமுறை தொடர்பான மேலும் அதிக விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் மத்தியப் பிரதேச மாநில கல்வித் துறை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in